admin

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர்  ஓய்வு!சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய மகத்தான சேவை நிறைவு; 9 விருதுகள் வென்ற பெருமைமிக்க அதிகாரி

பாறுக் ஷிஹான்-தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் சமூகத்தின் அமைதிக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த பொலிஸ் உத்தியோகத்தர் பிரதம பொலிஸ் பரிசோதகர் (Chief Inspector of Police) ஐ.எல்.ஏ. கபூர்   தனது 41 வருட கால மகத்தான பொலிஸ் சேவையிலிருந்து இன்று   உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றார். 1966ஆம் ஆண்டு சம்மாந்துறை மண்ணில் பிறந்த இவர், தாய்நாட்டிற்கும் தனது சொந்த மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனது நீண்டகாலச் சேவையை நிறைவு செய்துள்ளார். வரலாற்றுத்

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர்  ஓய்வு!சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய மகத்தான சேவை நிறைவு; 9 விருதுகள் வென்ற பெருமைமிக்க அதிகாரி Read More »

இந்தியாவிற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இந்திய விசா தொடர்பான  விளக்கத்தை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம் 

ஹஸ்பர் ஏ.எச்- இலங்கையர்களுக்கு காலதாமதமின்றி மற்றும் சுமூகமாக விசாக்களை வழங்குவது எமது நிலையான கொள்கையாகும். உலகின் பல நாடுகளைப் போலவே, இந்தியாவிற்குப் பயணிக்கும் இலங்கையர்களும் இ-விசா (E-Visa) வசதியைப் பெற முடியும். எனினும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக விண்ணப்பிக்க விரும்பும் இலங்கைப் பிரஜைகள், ஆன்லைனில் விண்ணப்பித்து, கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரக விண்ணப்ப மையங்களில் (Indian Consular Application Centres – ICAC) தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க

இந்தியாவிற்குச் செல்லும் இலங்கை யாத்திரிகர்களுக்கான இந்திய விசா தொடர்பான  விளக்கத்தை வெளியிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயம்  Read More »

தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்புசடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு!—

பாறுக் ஷிஹான் (அம்பாறை நிருபர்) இரு வேறு சந்தர்ப்பங்களில் தூக்கில் தொங்கிய பெண்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பிரதேசங்களில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்கள் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக கையளிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சமூக ஊடக விமர்சனம்: மருதமுனை சம்பவத்தில் தீவிர விசாரணைமருதமுனை-6 ஆம் பிரிவைச் சேர்ந்த தௌபீக் சினாத் றினா (வயது 20) என்ற திருமணமாகாத பெண்  கடந்த செவ்வாய்க்கிழமை (21) மாலை

தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்புசடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு: உயிரியல் பாகங்கள் அரச பகுப்பாய்வுக்கு அனுப்புவிப்பு!— Read More »

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல்

“1983 கறுப்பு ஜூலையின் 43 வருட கால வலி சுமந்த ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையானது, வரலாற்றில் என்றும் மறக்க முடியாத வடுவாகும்” என காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, கடந்த புதன்கிழமை (23) மாலை கல்முனை   பகுதியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் மக்களுக்கு எதிராக

கல்முனையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ‘கறுப்பு ஜூலை’ 43ஆவது ஆண்டு நினைவேந்தல் Read More »

மொழிகள் மனிதர்களை இணைக்கும் மிகச் சிறந்த பாலம்.

“Language Bridge – Trincomalee to Colombo” ஹஸ்பர் ஏ.எச் – இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி 20.07.2026 முதல் 23.07.2026 வரை திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும், திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஊடாக சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து, புதிய நட்புறவுகளை உருவாக்கி, மொழி, கலாசாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பல பயனுள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்

மொழிகள் மனிதர்களை இணைக்கும் மிகச் சிறந்த பாலம். Read More »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் ஆகஸ்ட் 4 வரை தொடர்ந்து விளக்கமறியலில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 05 வெவ்வேறு வழக்குகள் தொடர்பிலேயே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் ஆகஸ்ட் 4 வரை தொடர்ந்து விளக்கமறியலில்! Read More »

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. நீதிமன்ற அழைப்பாணையை மீறி ஆஜராகத் தவறினமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உடனடியாக பிறப்பித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை உத்தரவு! Read More »

மடவலையில் விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது: ரூ.1.69 கோடி பணம், தங்கம் மற்றும் உபகரணங்கள் பறிமுதல்!

மடவலைப் பகுதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் சட்டவிரோதமான முறையில் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 கிலோகிராமிற்கும் அதிகமான தங்கம் மற்றும் ரூ. 1 கோடியே 69 இலட்சம் ரொக்கப் பணத்துடன் இரு பெண்கள் உட்பட 10 சந்தேகநபர்கள் வத்தேகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை (22) குறித்த விடுதியில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 8 ஆண்களும் 2 பெண்களும் அடங்குவதுடன்,

மடவலையில் விடுதியில் தங்கியிருந்த இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது: ரூ.1.69 கோடி பணம், தங்கம் மற்றும் உபகரணங்கள் பறிமுதல்! Read More »

போரதீவுப்பற்று பிரதேச சபையின் 14வது அமர்வு: சபை உறுப்பினர் இடைநீக்கம், 1990 ஆம்புலன்ஸ் சேவை உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபையின் 14வது சபை அமர்வு, சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உபதவிசாளர் தங்கராசா கயசீலன், பிரதேச சபையின் செயலாளர் சண்முகராஜா விஜிதராஜா, சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபையின் துறைசார் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். 1. தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் 1 மாதத்திற்கு இடைநீக்கம்: பிரதேச சபையின் செயல்பாடுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை விமர்சித்துத் தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் (Facebook) பதிவிட்டு

போரதீவுப்பற்று பிரதேச சபையின் 14வது அமர்வு: சபை உறுப்பினர் இடைநீக்கம், 1990 ஆம்புலன்ஸ் சேவை உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! Read More »

ஹபராணை – கந்தளாய் வீதியில் பயங்கர விபத்து: காருடன் மோதிய மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசம்!

ஹபராணை – கந்தளாய் பிரதான வீதியின் கிதுல் உதுவா பகுதியில் காரும் மோட்டார்சைக்கிளும் மோதி இடம்பெற்ற பயங்கர விபத்தில் மோட்டார்சைக்கிள் முற்றாகத் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹபராணை – கந்தளாய் வீதியில் பயங்கர விபத்து: காருடன் மோதிய மோட்டார்சைக்கிள் தீப்பற்றி எரிந்து நாசம்! Read More »