மொழிகள் மனிதர்களை இணைக்கும் மிகச் சிறந்த பாலம்.

“Language Bridge – Trincomalee to Colombo”

ஹஸ்பர் ஏ.எச் –

இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி 20.07.2026 முதல் 23.07.2026 வரை திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும், திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களும் பங்கேற்றனர். இந்நிகழ்வின் ஊடாக சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் ஒன்றிணைந்து, புதிய நட்புறவுகளை உருவாக்கி, மொழி, கலாசாரம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு தொடர்பான பல பயனுள்ள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.

இந்நிகழ்ச்சியின் நிறைவு விழா கிண்ணியா பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் திரு. எம்.எச்.முகம்மது கனி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ ஜி எம் ஹேமந்த குமார கலந்து சிறப்பித்தார்.

இதன் போது பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இளைஞர்களிடையே நல்லிணக்கம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் இவ்வாறான அர்த்தமிக்க நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த திருகோணமலை மாவட்டச் செயலகத்திற்கும், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சிற்கும், மேலும் நிகழ்ச்சியின் வெற்றிக்காக பங்களித்த அனைத்து அதிகாரிகள், வளவாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றனர்.

Share the Post: