Filter posts by category

உலகச் செய்திகள்

சமூக ஊடகப் பதிவு விவகாரம்: சவுதியில் கைதான இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை? – வெளியானது அதிர்ச்சித் தீர்ப்பு!

சமூக ஊடகத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வழக்கின் முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் மீதான இறுதித் தீர்ப்பு நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளது. இதன்போதே

சமூக ஊடகப் பதிவு விவகாரம்: சவுதியில் கைதான இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை? – வெளியானது அதிர்ச்சித் தீர்ப்பு! Read More »

மட்டக்களப்பில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல்  நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று வியாழக்கிழமை(17.09.2023) களுதாவளை, களுவாஞ்சிகுடி, மாங்காடு போன்ற பல ககுதிகளிலும் திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்திக்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். செப்டம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் 26 ஆம் திகதி வரைக்கும்

மட்டக்களப்பில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Read More »

அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல்: உலகை உலுக்கிய கொடூர சம்பவத்தின் 25ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

உலக வரலாற்றையும் சர்வதேச அரசியலையும் வேரோடு உலுக்கிய அமெரிக்க இரட்டை கோபுர பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (2026 செப்டம்பர் 11) கால் நூற்றாண்டு (25 ஆண்டுகள்) நிறைவடைகிறது. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று, அல்-கொய்தா பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பயணிகள் விமானங்கள் நியூயார்க்கின் அடையாளமாகத் திகழ்ந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் (Twin Towers) மற்றும் வாஷிங்டனில் உள்ள பென்டகன் தலைமையகம் ஆகியவற்றின் மீது மோதி கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 2,970-க்கும்

அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல்: உலகை உலுக்கிய கொடூர சம்பவத்தின் 25ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று! Read More »

 COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள்

vadivel shagthivel ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தலைமையகத்தில் நடைபெற்று வரும் மீன்வளக் குழுவின் 37ஆவது அமர்வில் (COFI37), இலங்கை தனது தேசிய மீன்வளக் கொள்கை முன்னுரிமைகள், கடல் வளங்களின் நிலையான முகாமைத்துவம், சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலின் பாதுகாப்பு மற்றும் பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் செப்டெம்பர் 7ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த முக்கிய சர்வதேச அமர்வில், உலக மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பின் நிலைமை தொடர்பான SOFIA 2026 அறிக்கை, சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடியை கட்டுப்படுத்துதல், காலநிலை மாற்றத்திற்கான தழுவல் மற்றும் தணிப்பு நடவடிக்கைகள், சிறிய அளவிலான மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு ஆதரவு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்படுகின்றன. இந்த அமர்வில் இலங்கையின் சார்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச கலந்துகொண்டு, இலங்கையின் மீன்வளத்துறையின் தற்போதைய நிலை, இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இலங்கையின் நிலைப்பாடுகளையும் முக்கிய கருத்துக்களையும் முன்வைத்தார். அத்துடன், வங்காள விரிகுடா அரசுகளுக்கிடையேயான அமைப்பான BOBP-IGO-வின் தலைமைப் பொறுப்பிலும் இலங்கை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டு, இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவுகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கிடையிலான பிராந்திய மீன்வள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியதன்

 COFI37 அமர்வில் இலங்கையின் மீன்வளக் கொள்கை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பான முக்கிய முன்மொழிவுகள் Read More »

அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து அக்கரைப்பற்று இளைஞர் சாதனை!

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்று, அக்கரைப்பற்று மண்ணுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார் நவீத் முஹம்மத் (Naveed Muhammad). அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி சப்ரி (Deputy Sheriff) என்பவரின் புதல்வரான நவீத் முஹம்மத், தனது கடின உழைப்பின் மூலமாகவே அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து, புதிய பணிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் உயர் பதவியொன்றை வகித்து, தனது குடும்பத்திற்கும் தாய்நாட்டிற்கும் புகழீட்டித் தந்துள்ள இளைஞர் நவீத் முஹம்மதுக்கு, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது

அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து அக்கரைப்பற்று இளைஞர் சாதனை! Read More »

3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, சுமார் 60 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 6 வயது சிறுமி மனிஷா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ரசுவா பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியின் அழுகுரலைக் கேட்ட மீட்புக்குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டெடுத்தனர். 3 நாட்களாக உயிருக்குப் போராடி மரணத்தை வென்ற அச்சிறுமி, அவசர மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாகத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி! Read More »

முதலாவது உலகளாவிய உணவு முறைமை உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் விஜயம்!

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பூட்டானைச் சென்றடைந்துள்ளார். பூட்டானின் பரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமரை, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) நேரில் வருகை தந்து உற்சாகமாக வரவேற்றார். ‘Global Conscious Food Systems Summit’ எனப்படும் முதலாவது உலகளாவிய விழிப்புணர்வுமிக்க உணவு முறைமை உச்சி மாநாடு பூட்டானில் நடைபெறுகின்றது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமமையிலான குழுவினர்

முதலாவது உலகளாவிய உணவு முறைமை உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் விஜயம்! Read More »

இந்தியாவுக்கு இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகள் விஜயம் (24–28 ஆகஸ்ட் 2026)

ஹஸ்பர் ஏ ஹலீம் – இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர தலைமையிலான 26 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவொன்று, 2026 ஆகஸ்ட் 24 முதல் 28 ஆம் திகதி வரை இந்தியாவுக்கு விஜயம் செய்தது. இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை செயலகத்தின் கீழ் இயங்கும் ஜனநாயகங்களுக்கான நாடாளுமன்ற ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (PRIDE) ஏற்பாட்டில் நடைபெற்ற திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிகழ்ச்சியின் மூலம் நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின்

இந்தியாவுக்கு இலங்கை நாடாளுமன்ற அதிகாரிகள் விஜயம் (24–28 ஆகஸ்ட் 2026) Read More »

ஸ்பெயினில் வெடித்த தக்காளிப் போர்: கோலாகலமாக நடைபெற்ற புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா!

ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் உள்ள புஞ்ஞோல் (Buñol) நகரில் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ (La Tomatina) தக்காளித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதத்தின் இறுதிப் புதன்கிழமையன்று கொண்டாடப்படும் இந்த உன்னதமான விழாவில், உலகம் முழுவதிலுமிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். சுமார் 120 தொன்னுக்கும் அதிகமான பழுத்த தக்காளிகள் லாரிகள் மூலம் வீதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு வீசப்பட்டன. சரியாக ஒரு மணி நேரம் நடைபெற்ற

ஸ்பெயினில் வெடித்த தக்காளிப் போர்: கோலாகலமாக நடைபெற்ற புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா! Read More »

சிறுவர்களுக்குத் தீங்கிழைத்த வழக்கு: 18 பில்லியன் டொலர் நட்டஈடு வழங்க மெட்டா நிறுவனம் இணக்கம்!

Facebook மற்றும் Instagram செயலிகள் சிறுவர்கள் மற்றும் சிறார்களை அடிமையாக்கி, அவர்களின் மனநலத்திற்குப் பெரும் தீங்கை விளைவிப்பதாகத் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில், சுமார் 18 பில்லியன் அமெரிக்க டொலர் (அண்ணளவாக 1,800 கோடி டொலர்) நட்டஈடு செலுத்த Meta நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா, கொலராடோ உட்பட 50க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்திருந்தன. சிறுவர்களின் மனச்சோர்வு, பதற்றம்

சிறுவர்களுக்குத் தீங்கிழைத்த வழக்கு: 18 பில்லியன் டொலர் நட்டஈடு வழங்க மெட்டா நிறுவனம் இணக்கம்! Read More »