• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • 3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி!

3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, சுமார் 60 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 6 வயது சிறுமி மனிஷா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

ரசுவா பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியின் அழுகுரலைக் கேட்ட மீட்புக்குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டெடுத்தனர்.

3 நாட்களாக உயிருக்குப் போராடி மரணத்தை வென்ற அச்சிறுமி, அவசர மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாகத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

Share the Post: