Filter posts by category

உள்ளூர் செய்திகள்

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” தாயார் கண்ணீர் கோரிக்கை!

இராஜதந்திர மட்டத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞர் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். குறித்த பதிவை அவர் உடனடியாகவே

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” தாயார் கண்ணீர் கோரிக்கை! Read More »

சமூக ஊடகப் பதிவு விவகாரம்: சவுதியில் கைதான இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை? – வெளியானது அதிர்ச்சித் தீர்ப்பு!

சமூக ஊடகத்தில் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்துத் தவறான கருத்தைப் பதிவிட்டதாகக் கூறி சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அனோஜன் என்பவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, வழக்கின் முதற்கட்ட விசாரணைகளின் முடிவில் அனோஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இத்தீர்ப்பை எதிர்த்து அனோஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டின் மீதான இறுதித் தீர்ப்பு நேற்று மாலை வழங்கப்பட்டுள்ளது. இதன்போதே

சமூக ஊடகப் பதிவு விவகாரம்: சவுதியில் கைதான இலங்கையர் அனோஜனுக்கு மரண தண்டனை? – வெளியானது அதிர்ச்சித் தீர்ப்பு! Read More »

மட்டக்களப்பில் S.V.S.A அமைப்பின் ஏற்பாட்டில் 6வது முறையாக இலவசக் கண்பரிசோதனை முகாம்!

மட்டக்களப்பு, கல்லடி உப்போடை ஸ்ரீ சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் அமைப்பான S.V.S.A (Sivananda & Vivekananda Student Association) இனால் ஒருங்கிணைக்கப்பட்ட இலவசக் கண்பரிசோதனை முகாம் இன்று (18.09.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லடி உப்போடை சிவாநந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இக்கண்பரிசோதனை முகாம், S.V.S.A அமைப்பினரால் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் சமூகப் பணித்திட்டத்தின் 6 ஆவது கட்டமாக அமைந்தது. இம்முகாமில் பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள்

மட்டக்களப்பில் S.V.S.A அமைப்பின் ஏற்பாட்டில் 6வது முறையாக இலவசக் கண்பரிசோதனை முகாம்! Read More »

யாழ். வட்டுக்கோட்டை பங்குரு முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் பக்திப்பரவசத்துடன் நிறைவு!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குரு முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை மிக விமரிசையாகவும் பக்திப்பூர்வமாகவும் நடைபெற்றது. இன்று காலை சுபமுஹூர்த்த வேளையில், கிரியைகள் நிறைவுற்று, வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடத்தி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளாசியைப் பெற்றுக் கொண்டனர். பக்தர்களுக்குத் தீர்த்த பிரசாதங்களும், அன்னதானமும்

யாழ். வட்டுக்கோட்டை பங்குரு முருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் பக்திப்பரவசத்துடன் நிறைவு! Read More »

 விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: வீடுகள், வெற்றிடங்கள் தீவிர பரிசோதனை!

பொதுமக்கள் தமது சூழலைத் தூய்மையாக வைத்திருக்க சுகாதாரப் பிரிவினர் வேண்டுகோள் பாறுக் ஷிஹான் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் செப்டம்பர் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் கீழ், கல்முனை மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் இன்று (18) தீவிர ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் நெறிப்படுத்தலில்,

 விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்: வீடுகள், வெற்றிடங்கள் தீவிர பரிசோதனை! Read More »

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை   பலி

வனஜீவிகள் திணைக்களம் தீவிர விசாரணை பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், மகாஓயா பிரதேசத்திற்குட்பட்ட  புறநகர்  கிராமம் ஒன்றில் ‘ஹக்க பட்டாஸ்’ (jaw-bomb) எனப்படும்   வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுடைய குட்டி யானை ஒன்று உணவோ நீரோ உட்கொள்ள முடியாமல் பல நாட்கள் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மனித மனங்களை உலுக்குவதாக அமைந்துள்ள இச் சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மூத்த கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவிக்கையில், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும்

வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை   பலி Read More »

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை!

பொதுமக்களின் முறைப்பாட்டையடுத்துச் சுகாதார அதிகாரிகளால் திடீர் சோதனை  பாறுக் ஷிஹான் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட உணவக/வர்த்தக நிலையமொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பெருந்தொகையான உணவுப் பொருட்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வர்த்தக நிலையத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற மற்றும் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்களிடமிருந்து நேற்று முன்தினம் (16) முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது. இம்முறைப்பாட்டையடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி

காலாவதியான உணவுப் பொருட்கள் மீட்பு: உரிமையாளருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை! Read More »

கல்முனை கடற்கரைப் பூங்கா நவீனமயமாக்கல்: ஆரம்பகட்டப் பணிகள் ஆரம்பம்

தூய்மையான, பசுமையான சூழலை உருவாக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா வழிகாட்டலில் நடவடிக்கை பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்தியத்தின் மிக முக்கியப் பொது இடமான கல்முனை கடற்கரைப் பூங்காவை நவீனமயமாக்கும் பிரம்மாண்டத் திட்டத்தின் ஆரம்பகட்டப் பணிகள் நேற்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. முன்மொழியப்பட்டுள்ள இப் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், பூங்கா வளாகத்தைச் சுத்தப்படுத்துதல் மற்றும் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக நிலத்தை மட்டப்படுத்துதல் உள்ளிட்ட பூர்வாங்கப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நாடாளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக்

கல்முனை கடற்கரைப் பூங்கா நவீனமயமாக்கல்: ஆரம்பகட்டப் பணிகள் ஆரம்பம் Read More »

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்குத் தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இரு நாட்டு முஸ்லிம் சமூகங்களின் நலன்கள் குறித்துக் கலந்துரையாடல்  பாறுக் ஷிஹான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டக் காரியாலயத்திற்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகங்களின் நலன்கள், சமூக

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட அலுவலகத்திற்குத் தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம் Read More »

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம்

முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மற்றும் இந்திய தூதுக்குழுவினர் பங்கேற்பு பாறுக் ஷிஹான் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் கல்முனை பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்குத் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் நேற்று (17) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது, பள்ளிவாசல்களின் நிருவாகிகளால் தமிழக அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பள்ளிவாசலின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர்,

கல்முனை கடற்கரை, பத்ரிய்யாஹ் ஜுமுஆ பள்ளிவாசல்களுக்கு தமிழக அமைச்சர் ஷாஜஹான் விஜயம் Read More »