யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குரு முருகன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக பெருவிழா இன்று காலை மிக விமரிசையாகவும் பக்திப்பூர்வமாகவும் நடைபெற்றது.
இன்று காலை சுபமுஹூர்த்த வேளையில், கிரியைகள் நிறைவுற்று, வேத மந்திரங்கள் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க ஆலயக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் சிறப்பான முறையில் நடத்தி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானின் அருளாசியைப் பெற்றுக் கொண்டனர். பக்தர்களுக்குத் தீர்த்த பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன.



Post Views: 18




