• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டக்களப்பில் S.V.S.A அமைப்பின் ஏற்பாட்டில் 6வது முறையாக இலவசக் கண்பரிசோதனை முகாம்!

மட்டக்களப்பில் S.V.S.A அமைப்பின் ஏற்பாட்டில் 6வது முறையாக இலவசக் கண்பரிசோதனை முகாம்!

மட்டக்களப்பு, கல்லடி உப்போடை ஸ்ரீ சிவானந்தா தேசிய பாடசாலை மற்றும் விவேகானந்தா மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் அமைப்பான S.V.S.A (Sivananda & Vivekananda Student Association) இனால் ஒருங்கிணைக்கப்பட்ட இலவசக் கண்பரிசோதனை முகாம் இன்று (18.09.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கல்லடி உப்போடை சிவாநந்தா தேசிய பாடசாலையில் இடம்பெற்ற இக்கண்பரிசோதனை முகாம், S.V.S.A அமைப்பினரால் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வரும் சமூகப் பணித்திட்டத்தின் 6 ஆவது கட்டமாக அமைந்தது.

இம்முகாமில் பெருமளவிலான பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது கண் பார்வையைப் பரிசோதித்துக் கொண்டதுடன், தேவையான வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டனர். பழைய மாணவர்களின் இத்தகைய தொடர்ச்சியான சமூக நலன் சார்ந்த சேவைப் பணிக்கு பாடசாலைச் சமூகத்தினரும் அப்பகுதி மக்களும் தமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.

Share the Post: