திருகோணமலை:
தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான ஆன்மீக, பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் வழிகாட்டுவதிலும் முதன்மைச் சக்தியாகத் திகழும் திருகோணமலை தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (15.09.2026) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் அரசியல் நிலவரங்கள் மற்றும் பிராந்திய ரீதியிலான சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான எதிர்கால நகர்வுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழ் மக்களின் ஆன்மீக மற்றும் பண்பாட்டு அடையாளங்களை முழுமையாகப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், இளைய தலைமுறையினரிடையே அறநெறிக்கல்வியையும் சமய விழுமியங்களையும் வலுப்படுத்துவது தொடர்பாகவும், தற்காலத்தில் சமயம் மற்றும் கலாசாரம் சார்ந்த நிலவும் முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்தும் இருவருக்கும் இடையே ஆக்கபூர்வமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.






