September 19, 2026

பாடுமீன்களின் சமர் மட்டக்களப்பில் கோலாகல ஆரம்பம்: புதிய கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தில் மெதடிஸ்த – புனித மைக்கேல் கல்லூரிகள் மோதல்!

மட்டக்களப்பு: மட்டக்களப்பு மண்ணின் புகழ்பெற்ற பாடசாலைகளான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மற்றும் புனித மைக்கேல் கல்லூரி ஆகிய அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாடுமீன்களின் சமர்’ (Battle of the Singing Fish) கிரிக்கெட் பெருஞ்சமர் இன்று சனிக்கிழமை (19.09.2026) காலை புதிய கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தில் (Kottaikallar / Kottaimunai Sports Village) மிகக் கோலாகலமாக ஆரம்பமானது. விளையாட்டு ரசிகர்கள் மற்றும் பழைய மாணவர்களின் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் ஆரம்பமான இப்போட்டியில், இரு பாடசாலைகளின்

பாடுமீன்களின் சமர் மட்டக்களப்பில் கோலாகல ஆரம்பம்: புதிய கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தில் மெதடிஸ்த – புனித மைக்கேல் கல்லூரிகள் மோதல்! Read More »

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம்: கண்ணகிகிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரம்மாண்ட சிரமதானப் பணி!

கண்ணகிகிராமம்: சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணிப் பாதுகாக்கும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், கண்ணகிகிராமம் பகுதியில் விசேட சிரமதானப் பணியொன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இச்சிரமதான நிகழ்வில் பிரதேச பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் ஒன்றிணைந்து, பொது இடங்கள், வீதியோரங்கள் மற்றும் கழிவுநீர் வடிகான்களைச் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டனர். சுற்றாடலைத் தூய்மையாக வைப்பதுடன், டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும்

‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டம்: கண்ணகிகிராமத்தில் முன்னெடுக்கப்பட்ட பிரம்மாண்ட சிரமதானப் பணி! Read More »

நானுஓயாவில் கோர வீதி விபத்து: வேன் – மோட்டார் சைக்கிள் மோதி 34 வயது பெண் பரிதாபமாக பலி!

நானுஓயா பகுதியில் இன்று சனிக்கிழமை (19.09.2026) காலை இடம்பெற்ற கொடூர வீதி விபத்தில் 34 வயதுடைய இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் தற்காலிகமாக வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34) என்பவரே இவ்விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவராவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை தனது தொழில் நிமித்தம் நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி ‘ஸ்கூட்டி’ (Scooty) ரக மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான

நானுஓயாவில் கோர வீதி விபத்து: வேன் – மோட்டார் சைக்கிள் மோதி 34 வயது பெண் பரிதாபமாக பலி! Read More »

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எம்.பி. வைத்தியர் இளையதம்பி சிறிநாத் – தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார் வரலாற்றுச் சந்திப்பு!

திருகோணமலை: தமிழர்களின் வரலாற்றுப் பூர்வமான ஆன்மீக, பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாப்பதிலும் வழிகாட்டுவதிலும் முதன்மைச் சக்தியாகத் திகழும் திருகோணமலை தென்கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார். கடந்த செவ்வாய்க்கிழமை (15.09.2026) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டு வரும் அரசியல் நிலவரங்கள் மற்றும் பிராந்திய ரீதியிலான சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும்,

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எம்.பி. வைத்தியர் இளையதம்பி சிறிநாத் – தென்கயிலை ஆதீன முதல்வர் அகத்தியர் அடிகளார் வரலாற்றுச் சந்திப்பு! Read More »

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை- ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ரிசாட் பதியுதீன் நிந்தவூரில் அதிரடி மறுப்பு

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பவருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பாறுக் ஷிஹான் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் கிடையாது எனவும், அவரை தான் நேரில் கண்டதுமில்லை, பேசியதுமில்லை எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சஹ்ரானைக் கண்டதுமில்லை-பேசியதுமில்லை- ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு ரிசாட் பதியுதீன் நிந்தவூரில் அதிரடி மறுப்பு Read More »

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர் அனோஜன்: ரிசாத் பதியுதீன் நேரில் சந்தித்து ஆறுதல்   இலங்கை முஸ்லிம் எம்.பி.க்களுடன் இணைந்து சவூதி மன்னருக்கு கூட்டு மேன்முறையீடு செய்ய தீர்மானம்

பாறுக் ஷிஹான் சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனின் வீட்டிற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் நேற்று (18) நேரில் விஜயம் செய்தார்.    அனோஜனின் தாயார், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்த அவர், குடும்பத்தினருக்குத் தனது ஆறுதலைத் தெரிவித்ததுடன், அனோஜனைப் பாதுகாப்பாக மீட்பதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.   முஸ்லிம் எம்.பி.க்கள் இணைந்து நடவடிக்கைஇச் சந்திப்பின் போது

சவூதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர் அனோஜன்: ரிசாத் பதியுதீன் நேரில் சந்தித்து ஆறுதல்   இலங்கை முஸ்லிம் எம்.பி.க்களுடன் இணைந்து சவூதி மன்னருக்கு கூட்டு மேன்முறையீடு செய்ய தீர்மானம் Read More »

சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தம்பலாகாமம் பிரதேச சபை உப தவிசாளர் வி. விஜயகுமார்

ஹஸ்பர் ஏ.எச்- சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை கிழக்கு மாகாணத்தை சேர்ந்த இளைஞன் சிவராசா அனோஜன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அவரது உயிரைக் காப்பாற்ற தேவையான அனைத்து சட்டரீதியான மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் பாராளுமன்ற குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட உப தவைவரும் தம்பலாகாமம் பிரதேச

சவூதி அரேபியாவில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள இளைஞர் சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தம்பலாகாமம் பிரதேச சபை உப தவிசாளர் வி. விஜயகுமார் Read More »

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” தாயார் கண்ணீர் கோரிக்கை!

இராஜதந்திர மட்டத்தில் அவசர நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் பாறுக் ஷிஹான்சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நட்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் எனும் இலங்கை இளைஞரை உயிருடன் மீட்டுத் தருமாறு அவரது தாயார் கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார். சமூக ஊடகமொன்றில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போதே குறித்த இளைஞர் சவூதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். குறித்த பதிவை அவர் உடனடியாகவே சமூக

சவூதியில் மரண தண்டனையை எதிர்நோக்கும் கல்முனை இளைஞர்: “மகனை உயிருடன் மீட்டுத் தாருங்கள்” தாயார் கண்ணீர் கோரிக்கை! Read More »

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு.

ஈழவர் ஜனநாயக முன்னணியின் (ஈரோஸ்) செயலாளர் நாயகம் இரா.பிரபாகரன் மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று இரவு மட்டக்களப்பில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் தழுவிய ரீதியில் தமிழ் பேசும் மக்களின் வாழ்வாதாரம், இருப்பு மற்றும் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான தர்க்க ரீதியான முன்னெடுப்புகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன. குறித்த விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் இரு கட்சிகளும் ஒருமித்து பயணிப்பது தொடர்பிலும், மக்களுக்கான பயணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும்

ஈழவர் ஜனநாயக முன்னணி (ஈரோஸ்) மற்றும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு. Read More »