September 1, 2026

3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி!

நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி, சுமார் 60 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு 6 வயது சிறுமி மனிஷா உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ரசுவா பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த சிறுமியின் அழுகுரலைக் கேட்ட மீட்புக்குழுவினர், உடனடியாகச் செயல்பட்டு அவரைப் பத்திரமாக மீட்டெடுத்தனர். 3 நாட்களாக உயிருக்குப் போராடி மரணத்தை வென்ற அச்சிறுமி, அவசர மருத்துவச் சிகிச்சைக்காக உடனடியாகத் தலைநகர் காத்மாண்டுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

3 நாட்கள் இடிபாடுகளுக்குள் போராடி உயிருடன் மீட்கப்பட்ட 6 வயது நேபாள சிறுமி! Read More »

கிண்ணியா சின்ன மகமார் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவுசர் குடிநீர் விநியோகம்

ஹஸ்பர் ஏ ஹலீம் – எல் நினோ காலநிலைத் தாக்கம் மற்றும் நிலவும் கடும் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ள கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட சின்ன மகமார் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிண்ணியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் நேற்று (31) மாலை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.அப்துல் ஹாதி அவர்களின் மூலமாக குடிநீர் பவுசர் மூலமாக நீர் விநியோகம் இடம் பெற்றன. நீண்ட காலமாக நிலவி வரும் வரட்சியால் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள்

கிண்ணியா சின்ன மகமார் பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பவுசர் குடிநீர் விநியோகம் Read More »

இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய திட்டம்: ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட 2026ஆம் ஆண்டின் தேசிய கனிமக் கொள்கைக்கு அமைவாக, நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேலும் பலப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது தொடர்பான முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது குறித்தும், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய திட்டம்: ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

பாணந்துறை – கொம்பனித்தெரு ரயில் பாதை நவீனமயமாக்கல்: ரத்மலானையில் புதிய தண்டவாளம் அமைக்கும் மையம் திறப்பு!

இலங்கையின் கடலோர ரயில் பாதையை அதிவேகமாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் நோக்கில், பாணந்துறை முதல் கொம்பனித்தெரு வரையிலான இரட்டை ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் முக்கிய கட்டமாக, ரத்மலானை பகுதியில் புதிய ரயில் தண்டவாளம் அமைக்கும் மையம் (Track laying site) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த முக்கிய அம்சங்கள்: இப்பணிகளை நேற்று (31) நேரில் சென்று பார்வையிட்ட போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்னா குணசேன, சீரமைப்புப் பணிகளை மேலும் விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு

பாணந்துறை – கொம்பனித்தெரு ரயில் பாதை நவீனமயமாக்கல்: ரத்மலானையில் புதிய தண்டவாளம் அமைக்கும் மையம் திறப்பு! Read More »

🌸 பெண்ணியத் தலைமைத்துவப் பயிற்சி – 2026 | Sittralai 2026 🌸

பெண்ணியம், பெண்களின் உரிமைகள் மற்றும் சமூக நீதியில் ஆர்வமுள்ள 35 வயதிற்குட்பட்ட இளம் பெண்கள் மற்றும் LBTQI+ நபர்களுக்கான பெண்ணியத் தலைமைத்துவப் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. 🌿 இப்பயிற்சி மட்டக்களப்பில் இரண்டு கட்டங்களாக வதிவிடப் பயிற்சியாக நடைபெறும். இரு கட்டங்களிலும் பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். 📅 விண்ணப்ப இறுதித் திகதி: 4 செப்டெம்பர் 2026🔗 விண்ணப்பிக்க: https://forms.gle/QEyKxwLSquCGDVfm6📩 CV அனுப்ப: suriyawomen1991@gmail.com இந்த வாய்ப்பில் ஆர்வமுள்ளவர்களுடன் தயவுசெய்து பகிருங்கள். 🌱 🌸 Feminist Leadership Programme

🌸 பெண்ணியத் தலைமைத்துவப் பயிற்சி – 2026 | Sittralai 2026 🌸 Read More »

காரைதீவிலிருந்து… “மகாநடிகை” இறுதிப் போட்டி வரை!

காரைதீவு மண்ணின் பெருமை நிவேதிகா இராசையா — “மகாநடிகை – Season 2” இன் 3வது Finalist! இந்தியக் கலையரங்கில் காரைதீவு மண்ணிற்குப் பெருமை சேர்த்து “மகாநடிகை – Season 2” இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய நிவேதிகா இராசையாவிற்கு சுதர்சனம் செய்திகளின் வாழ்த்துகள்!! கிழக்கிலங்கையின் காரைதீவு மண்ணைச் சேர்ந்த செல்வி. நிவேதிகா இராசையா, தனது விடாமுயற்சி, திறமை மற்றும் அசாத்தியமான நடிப்பாற்றலால், இந்தியாவின் பிரபல Zee Tamil தொலைக்காட்சியின் “மகாநடிகை – Season 2” போட்டியின் 3வது

காரைதீவிலிருந்து… “மகாநடிகை” இறுதிப் போட்டி வரை! Read More »

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் வைப்பு

பாறுக் ஷிஹான் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலையொன்றில் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளிடம் சுகாதாரப் பரிசோதனை என்ற போர்வையில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 51 வயதுடைய பொதுச்சுகாதார பரிசோதகர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரான அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று (31) கல்முனைத் தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம். சாஜித் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இரு

பாடசாலை மாணவர்களிடம் பாலியல் சேட்டை-பொதுச்சுகாதார பரிசோதகர் விளக்கமறியலில் வைப்பு Read More »

மெலிஞ்சிமுனை கடல் அட்டை பண்ணைகள் விவகாரம் சட்ட, தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கைமக்களின் நியாயமான கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படும் – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் கடல் அட்டை பண்ணைகள் அமைப்பது தொடர்பாக எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் குறித்து முறையான சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துவரசர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ. மரியதாஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் (31) கொழும்பில் உள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் பிரதி அமைச்சரை சந்தித்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்றை கையளித்தனர். இதன்போது, கடல் அட்டை பண்ணைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலும் இடம்பெற்றது. மெலிஞ்சிமுனை பகுதியில் தங்களுக்கு முறையாக வழங்கப்பட்டுள்ள கடல் அட்டை பண்ணைகளுக்கான அனுமதிகளை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மீனவ பிரதிநிதிகள் பிரதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் வழிகாட்டலின் கீழ், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையான (NAQDA) ஏற்பாட்டில், அண்மையில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கடல் அட்டை உற்பத்திப் பண்ணைகளை அமைப்பதற்கான பரிந்துரைக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குறித்த கடல் அட்டை பண்ணைகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டால் சிறு கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படக்கூடும் என்றும், அனுமதி வழங்கும் செயற்பாட்டில் விதிமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சில தரப்பினர் முன்னதாக ஊடக சந்திப்பொன்றின் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்ததாக மீனவ பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இதனையடுத்து, குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட மீனவ மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகள் மற்றும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, குறித்த விவகாரம் தொடர்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் ஏற்கனவே அறியப்படுத்தியுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விடயத்தில் தனிப்பட்ட கட்சி அரசியலுக்கோ அல்லது வேறு எந்தப் பின்னணிக்கோ இடமில்லை எனத் தெரிவித்த பிரதி அமைச்சர், கடல் சார்ந்த எந்தவொரு நடவடிக்கையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுடன் முறையாகக் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். தொழில்நுட்ப மற்றும் சட்டரீதியான ஆய்வுகளின் அடிப்படையிலேயே கடல் அட்டை பண்ணைகள் தொடர்பான முதற்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சிறு கடற்றொழிலாளர்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகளுக்கோ அல்லது அவர்களின் வாழ்வாதாரத்திற்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, மெலிஞ்சிமுனை பகுதி மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் கருத்திற்கொண்டு, சிறு கடற்றொழிலாளர்களின் நலன்களை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் மேலதிக ஆலோசனைகளை மேற்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் உறுதியளித்தார். இந்தச் சந்திப்பில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

மெலிஞ்சிமுனை கடல் அட்டை பண்ணைகள் விவகாரம் சட்ட, தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கைமக்களின் நியாயமான கோரிக்கைகள் கருத்திற்கொள்ளப்படும் – பிரதி அமைச்சர் ரத்ன கமகே Read More »

மட்டக்களப்பு மாவட்ட செயலக வீதி மற்றும் பாலமீன்மடு வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் மக்கள் வீதியால் பிரயாணிக்க முடியாத நிலை —  ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு-

(கனகராஜா சரவணன்;) மாவட்ட புதிய செயலகத்துக்கு செல்லும் வீதியில் இரு பக்கமும் இறந்த கால்நடைகள், மீன் கழிவுகள், கோழிக்கழிவுகள் குப்பை கூழங்கள் நிறைந்து காணப்படுகின்றதுடன்  துர்நாற்றம் வீசுகின்றதால் இந்த வீதியால் பிரயாணிக்கும் மக்கள் மூக்கை பொத்திக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வீதியின் இரு பக்கமும் கொட்டப்பட்டுள்ள இந்த குப்பைகளை அகற்ற மாநகர சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த

மட்டக்களப்பு மாவட்ட செயலக வீதி மற்றும் பாலமீன்மடு வீதிகளில் குப்பைகள் அகற்றப்படாததால் மக்கள் வீதியால் பிரயாணிக்க முடியாத நிலை —  ஈ.பி.டி.பி கட்சி அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு- Read More »

முதலாவது உலகளாவிய உணவு முறைமை உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் விஜயம்!

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பூட்டானைச் சென்றடைந்துள்ளார். பூட்டானின் பரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமரை, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) நேரில் வருகை தந்து உற்சாகமாக வரவேற்றார். ‘Global Conscious Food Systems Summit’ எனப்படும் முதலாவது உலகளாவிய விழிப்புணர்வுமிக்க உணவு முறைமை உச்சி மாநாடு பூட்டானில் நடைபெறுகின்றது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமமையிலான குழுவினர்

முதலாவது உலகளாவிய உணவு முறைமை உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் விஜயம்! Read More »