• Home
  • உலகச் செய்திகள்
  • முதலாவது உலகளாவிய உணவு முறைமை உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் விஜயம்!

முதலாவது உலகளாவிய உணவு முறைமை உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பூட்டான் விஜயம்!

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பூட்டானைச் சென்றடைந்துள்ளார்.

பூட்டானின் பரோ சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமரை, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) நேரில் வருகை தந்து உற்சாகமாக வரவேற்றார்.

‘Global Conscious Food Systems Summit’ எனப்படும் முதலாவது உலகளாவிய விழிப்புணர்வுமிக்க உணவு முறைமை உச்சி மாநாடு பூட்டானில் நடைபெறுகின்றது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காகவே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமமையிலான குழுவினர் பூட்டான் சென்றுள்ளனர்.

இவ்விஜயத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும், சர்வதேச உணவு பாதுகாப்பு மற்றும் நிலையான உணவு முறைமைகள் குறித்தும் பூட்டான் பிரதமருடன் இலங்கை பிரதமர் கலந்துரையாடவுள்ளார்.

Share the Post: