• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய திட்டம்: ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கையின் கனிமத் தொழிற்துறையை மேம்படுத்த புதிய திட்டம்: ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட 2026ஆம் ஆண்டின் தேசிய கனிமக் கொள்கைக்கு அமைவாக, நாட்டின் கனிமத் தொழிற்துறையை மேலும் பலப்படுத்துவது மற்றும் மேம்படுத்துவது தொடர்பான முக்கிய உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று (31) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகபட்ச பங்களிப்பை வழங்குவது குறித்தும், ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

Share the Post: