• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • சிறுவர்களுக்குத் தீங்கிழைத்த வழக்கு: 18 பில்லியன் டொலர் நட்டஈடு வழங்க மெட்டா நிறுவனம் இணக்கம்!

சிறுவர்களுக்குத் தீங்கிழைத்த வழக்கு: 18 பில்லியன் டொலர் நட்டஈடு வழங்க மெட்டா நிறுவனம் இணக்கம்!

Facebook மற்றும் Instagram செயலிகள் சிறுவர்கள் மற்றும் சிறார்களை அடிமையாக்கி, அவர்களின் மனநலத்திற்குப் பெரும் தீங்கை விளைவிப்பதாகத் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில், சுமார் 18 பில்லியன் அமெரிக்க டொலர் (அண்ணளவாக 1,800 கோடி டொலர்) நட்டஈடு செலுத்த Meta நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா, கொலராடோ உட்பட 50க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்திருந்தன. சிறுவர்களின் மனச்சோர்வு, பதற்றம் மற்றும் சமூக ஊடக அடிமைத்தனத்திற்கு மெட்டாவின் செயலி வடிவமைப்புகளே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது.

அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், நீண்ட கால சட்டப் போராட்டங்களைத் தவிர்க்கும் பொருட்டு மெட்டா நிறுவனம் இந்த இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளது.

புதிய பாதுகாப்பு நடைமுறைகள்:

நிதி நட்டஈட்டுடன் தவிர, சிறார்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மெட்டா நிறுவனம் பின்வரும் கடுமையான மாற்றங்களை நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டுள்ளது:

  • திரை நேரக் கட்டுப்பாடு: சிறுவர்களுக்கான தினசரி பயன்பாட்டு நேரத்திற்கு வரம்பு நிர்ணயித்தல்.
  • இரவு நேரக் கட்டுப்பாடு (Night Mode): நள்ளிரவு முதல் அதிகாலை வரை சிறுவர்கள் கணக்குகளுக்கு அறிவிப்புகள் (Notifications) செல்வது தடுக்கப்படுதல்.
  • பள்ளி நேரக் கட்டுப்பாடு: பள்ளி இயங்கும் நேரங்களில் தேவையற்ற அறிவிப்புகள் முடக்கப்படுதல்.

வரலாற்றிலேயே ஒரு தொழில்நுட்ப நிறுவனம் செலுத்தும் மிகப்பெரிய இழப்பீட்டுத் தொகைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுவதுடன், சமூக ஊடகப் பாதுகாப்பில் இதுவொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Share the Post: