August 27, 2026

ஸ்பெயினில் வெடித்த தக்காளிப் போர்: கோலாகலமாக நடைபெற்ற புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா!

ஸ்பெயினின் வலென்சியா மாகாணத்தில் உள்ள புஞ்ஞோல் (Buñol) நகரில் உலகப் புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ (La Tomatina) தக்காளித் திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஒகஸ்ட் மாதத்தின் இறுதிப் புதன்கிழமையன்று கொண்டாடப்படும் இந்த உன்னதமான விழாவில், உலகம் முழுவதிலுமிருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர் மக்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர். சுமார் 120 தொன்னுக்கும் அதிகமான பழுத்த தக்காளிகள் லாரிகள் மூலம் வீதிகளுக்குக் கொண்டுவரப்பட்டு வீசப்பட்டன. சரியாக ஒரு மணி நேரம் நடைபெற்ற

ஸ்பெயினில் வெடித்த தக்காளிப் போர்: கோலாகலமாக நடைபெற்ற புகழ்பெற்ற ‘லா டொமாட்டினா’ திருவிழா! Read More »

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு:

இலங்கையிலும் எரிபொருள் விலையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் வலியுறுத்து   ஹஸ்பர் ஏ ஹலீம் – ​சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதன் பலனை இலங்கையிலுள்ள சாதாரண பொதுமக்களுக்கு அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார். ​கிண்ணியாவில் இன்று (27)இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். ​அங்கு அவர் தொடர்ந்து

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவு: Read More »

சிறுவர்களுக்குத் தீங்கிழைத்த வழக்கு: 18 பில்லியன் டொலர் நட்டஈடு வழங்க மெட்டா நிறுவனம் இணக்கம்!

Facebook மற்றும் Instagram செயலிகள் சிறுவர்கள் மற்றும் சிறார்களை அடிமையாக்கி, அவர்களின் மனநலத்திற்குப் பெரும் தீங்கை விளைவிப்பதாகத் தொடரப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கில், சுமார் 18 பில்லியன் அமெரிக்க டொலர் (அண்ணளவாக 1,800 கோடி டொலர்) நட்டஈடு செலுத்த Meta நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா, கொலராடோ உட்பட 50க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் இணைந்து மெட்டா நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கைத் தொடுத்திருந்தன. சிறுவர்களின் மனச்சோர்வு, பதற்றம்

சிறுவர்களுக்குத் தீங்கிழைத்த வழக்கு: 18 பில்லியன் டொலர் நட்டஈடு வழங்க மெட்டா நிறுவனம் இணக்கம்! Read More »

தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பௌர்ணமி கலை விழா

ஹஸ்பர் ஏ ஹலீம் – திருகோணமலை மாவட்ட,தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஏற்பாட்டில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட பௌர்ணமி கலை விழா நேற்று மாலை (26) தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி,உப தவிசாளர் வி.விஜயகுமார் ,முள்ளிப்பொத்தானை விகாரையின்  விகாராதிபதி, திருகோணமலை பட்டினமும்

தம்பலகாமம் பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் பௌர்ணமி கலை விழா Read More »

மக்கள் மகிழ்வுடன் 42வது தேசிய மீலாதுன் நபி அரச விழா: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கோலாகலம்!

நாட்டின் 42வது தேசிய மீலாதுன் நபி அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் மக்கள் திரளின் பெரும் மகிழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது. நபிகள் நாயகத்தின் ஜனன தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், சர்வ மதத் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். நாட்டின் சகோதரத்துவத்தையும் மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்த இவ்விழாவில், கலை, கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பு உரைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் மகிழ்வுடன் 42வது தேசிய மீலாதுன் நபி அரச விழா: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கோலாகலம்! Read More »

உலக ஈட்டி எறிதல் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க!

பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்த இலங்கையின் முன்னணி தடகள வீரர் ருமேஷ் தரங்க, உலக ஈட்டி எறிதல் வீரர்களுக்கான உலகத் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றியுள்ளார். சுவிட்சர்லாந்தின் லோசான் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12 ஆவது சுற்றில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான திறமையின் அடிப்படையிலேயே இந்த வரலாற்று சாதனை சாத்தியமாகியுள்ளது. கடந்த ஒகஸ்ட் 21 ஆம் திகதி நடைபெற்ற இப்போட்டியில், 88.14 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி

உலக ஈட்டி எறிதல் தரவரிசை: மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்றி சாதனை படைத்தார் இலங்கையின் ருமேஷ் தரங்க! Read More »

மெல்பேர்ன் – கொழும்பு நேரடி விமான சேவையை ஆரம்பித்தது Jetstar!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்திலிருந்து கொழும்பு நோக்கிய Jetstar Airways நிறுவனத்தின் முதலாவது நேரடி விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தது. 271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வருகை தந்த Boeing 787 Dreamliner ரக விமானத்திற்கு விமான நிலையத்தில் நீர் பீச்சி பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கண்டிய நடனக் கலைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. Jetstar நிறுவனத்தின் இந்த புதிய சேவை வாரத்தில் மூன்று நாட்கள் (செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்)

மெல்பேர்ன் – கொழும்பு நேரடி விமான சேவையை ஆரம்பித்தது Jetstar! Read More »

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைப் பிரஜைகள் எவ்வித விசாரணைகளுக்கோ அல்லது கைதுகளுக்கோ உள்ளாகாமல், நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதற்கு தேவையான சட்டரீதியான தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட அலுவலகத்தில்  (26.08.2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோருடன் இணைந்து நடைபெற்ற இச்சந்திப்பில், ஜனாதிபதியுடனான உயர்மட்டக் கலந்துரையாடலில் எட்டப்பட்ட தீர்மானங்கள் உள்ளிட்ட மாவட்ட மட்டத்திலான முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது. அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்ததாவது, யுத்த காலத்தில் முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கையர்கள், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியபோது வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகள், அண்மையில் பலாலி விமான நிலையம் ஊடாக நாடு திரும்பிய சிலருக்கு வழங்கப்படாததன் காரணமாக கைதுச் சம்பவங்கள் இடம்பெற்றது.. இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோரின் தலையீட்டின் மூலம் குறித்த நபர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் முக்கிய தீர்மானமொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்படி உயிரைப் பாதுகாப்பதற்காக முறைசாரா வழிகளில் நாட்டை விட்டு வெளியேறிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் தற்போது நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்தினூடாகவும் அச்சமின்றித் தாயகம் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நாடு திரும்பும் இவ்வாறான நபர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கும், தேவையான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக தேவையான உதவிகள் வழங்கப்படும். அத்துடன், கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக, தேசிய பாதுகாப்பையும் மக்களின் உரிமைகளையும் சமநிலையில் பேணியவாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார். இதன்படி, 2009ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 811 ஏக்கர் அரச காணிகளும் 21,942 ஏக்கர் தனியார் காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், 2025 ஜனவரி முதல் 2026 ஆகஸ்ட் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் 65 ஏக்கர், கிளிநொச்சியில் 128 ஏக்கர், முல்லைத்தீவில் 615 ஏக்கர், மன்னாரில் 135 ஏக்கர் மற்றும் வவுனியாவில் 150 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே, பலாலி விமான நிலைய வீதியின் கிழக்குப் பகுதியில் தற்போது விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் வீடுகளை அமைத்து நிரந்தரமாகக் குடியேறுவதற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வாசவிளான் வீதியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காணிகளில் பாதுகாப்புத் தேவைகளுக்கு அத்தியாவசியமான காணிகளைத் தவிர்ந்த ஏனைய காணிகளை மீள வழங்குவது தொடர்பிலும், நிரந்தரமாகத் தேவைப்படும் காணிகளுக்குப் பொருத்தமான தற்போதைய மதிப்பின் படி இழப்பீட்டை வழங்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றன. இதேவேளை, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை முன்னிட்டு நேற்று (25.08.2026) நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவின் பங்கேற்புடன் பிரதான நிகழ்வு நடைபெற்றது. தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றபோது அடையாளம் காணப்பட்ட 15,966 குடும்பங்களில் 11,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான அடிப்படை ஆவணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக வரவு செலவுத் திட்டத்தில் 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 25 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளதுடன், ஆரம்ப கட்டமாக 101 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா வீதம் இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் மருத்துவ அதிகாரிகளின் அர்ப்பணிப்பின் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 565 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அகழ்ந்தெடுக்கப்பட்ட எச்சங்களில் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவும், சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் நீதி அமைச்சு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றி நாடு திரும்பலாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க Read More »