மெல்பேர்ன் – கொழும்பு நேரடி விமான சேவையை ஆரம்பித்தது Jetstar!

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரத்திலிருந்து கொழும்பு நோக்கிய Jetstar Airways நிறுவனத்தின் முதலாவது நேரடி விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

271 பயணிகள் மற்றும் 13 விமானப் பணியாளர்களுடன் வருகை தந்த Boeing 787 Dreamliner ரக விமானத்திற்கு விமான நிலையத்தில் நீர் பீச்சி பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கண்டிய நடனக் கலைஞர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Jetstar நிறுவனத்தின் இந்த புதிய சேவை வாரத்தில் மூன்று நாட்கள் (செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில்) மெல்பேர்ன் மற்றும் கொழும்பு இடையே இயக்கப்படவுள்ளது.

சுமார் 10 மணி நேரப் பயணக் காலத்தைக் கொண்ட இந்த நேரடி சேவை, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை இடையிலான சுற்றுலா, வணிகம் மற்றும் இருநாட்டுப் பயணத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: