- பலி எண்ணிக்கை மற்றும் காணாமல் போனோர்: ஹிமாலய எல்லைப் பகுதியான நேபாளம் (ரசுவா, நுவாகோட் மாவட்டங்கள்) மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் இதுவரை 165க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 400க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்
- பேரிடருக்கான காரணம்: ஆரம்பத்தில் நிலநடுக்கம் என சந்தேகிக்கப்பட்டாலும், பனிப்பாறை வீழ்ச்சி (Glacier Collapse) மற்றும் மலையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவே இந்த பயங்கர வெள்ளத்திற்குக் காரணம் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியுள்ளது.

- பாதிக்கப்பட்ட இடங்கள்: திரிசூலி, போதே கோஷி மற்றும் லெண்டே ஆற்றோரக் கிராமங்கள் மற்றும் சர்வதேச எல்லையான ‘கெய்ராங் பாலம்’ (Gyirong Port) பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளன.
- மீட்புப் பணிகள்: நேபாள இராணுவம் மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மலைப் பகுதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் செல்வதில் சிக்கல் நீடிக்கிறது


Views: 71




