அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்று, அக்கரைப்பற்று மண்ணுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார் நவீத் முஹம்மத் (Naveed Muhammad).
அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி சப்ரி (Deputy Sheriff) என்பவரின் புதல்வரான நவீத் முஹம்மத், தனது கடின உழைப்பின் மூலமாகவே அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து, புதிய பணிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
அமெரிக்காவில் உயர் பதவியொன்றை வகித்து, தனது குடும்பத்திற்கும் தாய்நாட்டிற்கும் புகழீட்டித் தந்துள்ள இளைஞர் நவீத் முஹம்மதுக்கு, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மக்களுக்கான சேவையில் தொடர்ந்தும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு, தனது புதிய பயணத்தில் அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்!

Post Views: 53




