September 5, 2026

கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம்

கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீP விக்னேஸ்வரர் பேராலய  வருடாந்த ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (05) இடம்பெற்றது.மூர்த்தி,தலம்,விருட்சம்,தீர்த்தம் எனும் நான்கு சிறப்புக்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் இன்று இடம்பெற்ற கொடியேற்றம் தொடர்ந்து 9 நாட்கள் இடம்பெறும் நான்கு குடிமக்களின் திருவிழாக்கள் 14ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவம் 15 ஆம் திகதி இடம்பெறும் பூங்கவானத்திருவிழா 16ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன்

கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் Read More »

மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் தோணி கவிழ்ந்த விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு

மட்டக்களப்பு கிரான்குளம் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தோணி ஒன்று பாரிய அலையில் சிக்கி கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (04) பிற்பகல் இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்குளம் செல்லத்தம்பி வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மீனவர் சங்கத் தலைவர் துரைராஜா முத்தையா மற்றும் விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய அமரசிங்கம் பரமலிங்கம் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை சுமார் 11.00 மணியளவில், குறித்த

மட்டக்களப்பு கிரான்குளம் கடலில் தோணி கவிழ்ந்த விபத்து – இரு மீனவர்கள் உயிரிழப்பு; ஒருவர் மீட்பு Read More »

ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலப் பாதயாத்திரை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் பங்கேற்பு

மட்டக்களப்பு, ஆயித்தியமலை வரலாற்றுச் சிறப்புமிக்க புனித சதாசகாய மாதா திருத்தலத்தின் 72 ஆவது ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, மட்டக்களப்பிலிருந்து திருத்தலத்தை நோக்கிய பாரம்பரிய பாதயாத்திரை இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது. இப்பாதயாத்திரையின் முக்கிய அம்சங்கள்: மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான கத்தோலிக்கப் பக்தர்கள், பக்திப் பாடல்களைப் பாடியவாறும் ஜெபங்களை ஏந்தியவாறும் ஆன்மீகப் பயணத்தில் இணைந்து கொண்டனர். மட்டக்களப்பு நகர்ப் பகுதியிலிருந்து ஆரம்பமான இந்த இறைப்பயணம், பிரதான வீதிகள் வழியாக ஆயித்தியமலை புனித சதாசகாய மாதா திருத்தலத்தை

ஆயித்தியமலை சதாசகாய மாதா திருத்தலப் பாதயாத்திரை: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப்பெருக்குடன் பங்கேற்பு Read More »

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை விரைவுபடுத்த ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல்

நீண்டகாலமாக தாமதமடைந்துள்ள கீழ் மல்வத்து ஓயா பலநோக்கு அபிவிருத்தித் திட்டப் பணிகளை துரிதப்படுத்துவது மற்றும் அதில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் திட்டம் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் கள நிலவரங்கள்: வடமத்திய மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக உருவாக்கப்படும் இத்திட்டத்தை 2029-2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது. உள்நாட்டு நிதிப் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்திற்காக

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை விரைவுபடுத்த ஜனாதிபதி தலைமையில் உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று முதல் குறைப்பு!

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கொள்கலன்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட புதிய விலை விபரம்: இந்த புதிய விலைத் திருத்தம் இன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் இன்று முதல் குறைப்பு! Read More »

அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து அக்கரைப்பற்று இளைஞர் சாதனை!

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரியாக நியமனம் பெற்று, அக்கரைப்பற்று மண்ணுக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளார் நவீத் முஹம்மத் (Naveed Muhammad). அக்கரைப்பற்றைச் சேர்ந்த அலி சப்ரி (Deputy Sheriff) என்பவரின் புதல்வரான நவீத் முஹம்மத், தனது கடின உழைப்பின் மூலமாகவே அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து, புதிய பணிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் உயர் பதவியொன்றை வகித்து, தனது குடும்பத்திற்கும் தாய்நாட்டிற்கும் புகழீட்டித் தந்துள்ள இளைஞர் நவீத் முஹம்மதுக்கு, சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களது

அமெரிக்க பொலிஸ் சேவையில் இணைந்து அக்கரைப்பற்று இளைஞர் சாதனை! Read More »

கிழக்கு எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தயார்

ஹஸ்பர் ஏ எச்- உலகளாவிய எல் நினோ சூழ்நிலையால் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நடவடிக்கைகளை அவசரமாக எடுப்பதற்காக, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில், (03) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஒரு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இது தொடர்பாக, முக்கியமாக மாகாணத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் நீர்மட்டம் குறைந்திருப்பதோடு, அதிக வெப்பநிலையும் சேர்ந்து, மக்களின் குடிநீர் பிரச்சினையும், வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும்

கிழக்கு எல்நினோ தாக்கத்தை எதிர்கொள்ள தயார் Read More »

இந்திய நிதியுதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட 21ஆவது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு

ஹஸ்பர் ஏ.எச்- இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் பிரதி அமைச்சர் டி.பி. சரத் ஆகியோர் இணைந்து, பொலன்னறுவை மாவட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ‘சுஹத கம’ மாதிரி கிராமத்தில் 24 வீடுகளை (04) பயனாளிகளிடம் கையளித்து, மாதிரி கிராமத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற சபாநாயகர்  (கலாநிதி) ஜகத் விக்கிரமரத்னவும் கலந்து கொண்டார்.  மாதிரி கிராம வீடமைப்புத் திட்டம், இலங்கையின் 25 மாவட்டங்களிலும் இந்திய

இந்திய நிதியுதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட 21ஆவது மாதிரி கிராமம் பயனாளிகளிடம் கையளிப்பு Read More »

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில்  6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு—

(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பு நெடியமடு பகுதியில் நீர்ப்பாசன திணைக்களம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு நீர் எடுப்பதற்காக வெட்டிய பாதுகாப்பற்ற  குழியில் 6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை (4) பிற்பகல் 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர். நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள 6ம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு  எதிர்பக்கம்

மட்டு நெடியமடுவில் பாலம் அமைக்க நீர் எடுக்க வெட்டிய பாதுகாப்பற்ற குழியில்  6 வயதுடைய சிறுவன் ஒருவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு— Read More »

அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக முனாஸ் பொறுப்பேற்பு

நூருல் ஹுதா உமர்  அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் புதிய பிரதம பொறியியலாளராக, பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ் அவர்கள் பதவியுயர்வு பெற்று (04) வெள்ளிக்கிழமை அம்பாரை மாவட்ட அலுவலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வீதி அபிவிருத்தி திணைக்களத்தில் கல்முனை பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளராகத் திறம்படச் சேவையாற்றி வந்த இவர், இலங்கை பொறியியலாளர் சேவையில் முதலாம் தரத்தைச் சேர்ந்த பொறியியலாளர் என்பதுடன் தனது திறமையான நிர்வாக ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்பு மிக்க பணியின் காரணமாக

அம்பாரை மாவட்ட வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக முனாஸ் பொறுப்பேற்பு Read More »