கிழக்கிலங்கையின் அம்பாரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீP விக்னேஸ்வரர் பேராலய வருடாந்த ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம் இன்று (05) இடம்பெற்றது.
மூர்த்தி,தலம்,விருட்சம்,தீர்த்தம் எனும் நான்கு சிறப்புக்களையும் கொண்டு விளங்கும் ஸ்ரீ விக்னேஸ்வரர் ஆலயத்தின் இன்று இடம்பெற்ற கொடியேற்றம் தொடர்ந்து 9 நாட்கள் இடம்பெறும் நான்கு குடிமக்களின் திருவிழாக்கள் 14ஆம் திகதி இடம்பெறும் சமுத்திர தீர்த்தோற்சவம் 15 ஆம் திகதி இடம்பெறும் பூங்கவானத்திருவிழா 16ஆம் திகதி இடம்பெறும் வைரவர் பூஜையுடன் நிறைவுறும்.
இன்று காலை கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை எடுத்துவரும் கிரியைகளும் வழிபாடுகளும்; இடம்பெற்று கொடிச்சீலைக்கான விசேட பூஜைகளும் நடைபெற்றது.
தொடர்ந்து வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த விக்னேஸ்வரர் பெருமான்; கொடியேற்றம் இடம்பெறும் இடத்திற்கு பக்தர்களினால் தூக்கிச் செல்லப்பட்டு அமர்த்தப்பட்டார்.
பின்னர் கொடியேற்றமானது பக்தர்களின் அரோகரா வேண்டுதலுக்கு மத்தியில் மங்கள வாத்தியம் முழங்க நடைபெற்றதுடன் கொடிதம்பத்திற்கான பூஜைகளும் நடைபெற்றன.
ஆலய தலைவர் சி.சுவேந்திரராஜா தலைமையில் நடைபெறும் வருடாந்த ஆவணி மகோற்சவ பெருவிழாவின கிரியைகள் யாவற்றையும் சிவாகம கிரியாஜோதி சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்களின் ஆசியுடனும் வழிநடத்தலுடனும் சிவஸ்ரீ கௌரி சங்கர் சர்மா குருக்கள் மற்றும் சிவஸ்ரீ சச்சிதானந்த குருக்கள் உள்ளிட்ட குருமார்கள்; நடாத்தி வைத்தனர்.
- Home
- ›
- உள்ளூர் செய்திகள்
- ›
- கோளாவில் அருள்மிகு அறுத்த நாக்கொட்டி ஸ்ரீ விக்னேஸ்வரர் பேராலய ஆவணி மகோற்சவ பெருவிழாவின் கொடியேற்றம்




