நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய கொள்கலன்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட புதிய விலை விபரம்:
- 12.5 கிலோகிராம்: ரூ.100 குறைப்பு — புதிய விலை: ரூ.4,365
- 5 கிலோகிராம்: ரூ.42 குறைப்பு — புதிய விலை: ரூ.1,750
- 2.3 கிலோகிராம்: ரூ.20 குறைப்பு — புதிய விலை: ரூ.815
இந்த புதிய விலைத் திருத்தம் இன்று முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருவதாக லிட்ரோ நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post Views: 50




