பாக்ஸ் ஆபீஸை அதிரவைக்க வந்த ‘ஜனநாயகன்’: உலகம் முழுவதும் 8,000 திரையரங்குகளில் பிரம்மாண்ட ரிலீஸ்! – ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலும், பல்வேறு தாமதங்களுக்குப் பிறகும் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அளப்பரிய உற்சாகத்துடனும் கோலாகலத்துடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்குகளின் எண்ணிக்கை விபரம்: ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வருகையை முன்னிட்டு, குமரி – கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திரையரங்குகளில் கொண்டாட்டங்கள் விண்னைத் தொட்டுள்ளன. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திரைப்படம் வெளியாகியுள்ளதால், திரையரங்கு வளாகங்கள் அனைத்தும் தற்போது திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.










