• Home
  • ›
  • உலகச் செய்திகள்
  • ›
  • எல் நினோ கனமழை: உலகின் வறண்ட அட்டகாமா பாலைவனத்தை வண்ணமயமாக்கிய அரிய மலர் வசந்தம்!

எல் நினோ கனமழை: உலகின் வறண்ட அட்டகாமா பாலைவனத்தை வண்ணமயமாக்கிய அரிய மலர் வசந்தம்!

உலகின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலியின் அட்டகாமா (Atacama) பாலைவனம், தற்போது கண்கவர் வண்ண மலர்களால் நிரம்பி வழியும் அரிய இயற்கை அதிசய நிகழ்வுக்கு சாட்சியமாகியுள்ளது.

‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றத்தின் காரணமாகப் பொழிந்த எதிர்பாராத கனமழை, வறண்ட பாலைவன மண்ணில் வழக்கத்திற்கு மாறாக அதிக ஈரப்பதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மண்ணுக்குள் பல ஆண்டுகளாக உறக்க நிலையில் இருந்த தாவர விதைகளும் கிழங்குகளும் உயிர்ம்பெற்று முளைக்கத் தொடங்கியுள்ளன.

முக்கிய அம்சங்கள்:

200 வகை தாவரங்கள்: ஊதா, வெள்ளை, மஞ்சள் எனப் பல்வேறு வண்ணங்களில் சுமார் 200 வகையான தாவரங்கள் இந்த வசந்த காலத்தில் பூத்துக் குலுங்கி வருகின்றன.

அதிகபட்ச மழைப்பதிவு: அட்டகாமாவின் சில பகுதிகளில் 180 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபரில் உச்சம்: இந்த ‘பூக்கும் பாலைவனம்’ (Flowering Desert) நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் அதன் உச்சக்கட்டத்தை அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களின் வருகை: மலர்களின் வருகையைத் தொடர்ந்து பூச்சிகள், தேனீக்கள், பறவைகள் மற்றும் பிற உயிரினங்களின் நடமாட்டமும் அதிகரித்து, பாலைவனப் பகுதி முழுமை பெற்ற இயற்கை சூழலாக மாறியுள்ளது.

இயற்கையின் இந்த வண்ணமயமான மாற்றம் சர்வதேச அளவில் சுற்றுப்பயணிகளையும் சூழலியலாளர்களையும் பெருமளவில் ஈர்த்து வருகிறது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடுவோர் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் : பொறுப்பற்ற கருத்து சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது – காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்