• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு: “TECHNOVATE 2026” புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சி கோலாகலம்!

யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு: “TECHNOVATE 2026” புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சி கோலாகலம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் (Faculty of Technology, University of Jaffna) 10ஆவது ஆண்டு நிறைவுப் பெருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “TECHNOVATE 2026 – Innovation Competition & Exhibition” புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சி, கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள தொழில்நுட்ப பீட வளாகத்தில் கடந்த சனிக்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

“சிறப்பான கல்வி, புத்தாக்கம் மற்றும் மாற்றத்தின் ஒரு தசாப்தம்” (A Decade of Innovation, Excellence & Transformation) எனும் கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாணவர்களின் படைப்பாற்றல், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வுத்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் வல்லுநர்கள் மற்றும் பெருந்திரளான மாணவர்கள் கலந்துகொண்டு இளம் கண்டுபிடிப்பாளர்களின் திறமைகளைப் பாராட்டியதுடன், நடுவர்களால் சிறந்த புத்தாக்கப் படைப்புகளுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

Share the Post: