• Home
  • உள்ளூர் செய்திகள்
  • முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் ஆகஸ்ட் 4 வரை தொடர்ந்து விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் ஆகஸ்ட் 4 வரை தொடர்ந்து விளக்கமறியலில்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 05 வெவ்வேறு வழக்குகள் தொடர்பிலேயே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • குறித்த 05 வழக்குகளிலும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 3 ஆம் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
  • பாதுகாப்பு காரணங்கள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இன்றைய வழக்கு விசாரணையின் போது அவர் காணொளி (Video Technology) தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
  • இருதரப்பு நியாயங்களையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை ஆகஸ்ட் 04 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
Share the Post: