பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய பிடியாணை உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (24) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

  • குறித்த வழக்கு இன்று (24) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
  • வழக்கு விசாரணையின் போது, அவரது பிணையாளர்களும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

நீதிமன்ற அழைப்பாணையை மீறி ஆஜராகத் தவறினமையைக் கருத்திற்கொண்டு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை உடனடியாக பிறப்பித்துள்ளது.

Share the Post: