admin

‘குடு அசங்க’ ஹெரோயினுடன் கைது

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம்  உஹன  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில்   நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த ‘குடு அசங்க’ எனப்படும் போதைப்பொருள் வியாபாரி  கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சனிக்கிழமை  (26) அதிகாலை   முன்னெடுக்கப்பட்ட திடீர்ச் சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் அவரது வீட்டில் வைத்து கைதானார். அப்பகுதியின் ஏற்கனவே  பிரதான போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து  ‘குடு அசங்க’ ரகசியமான முறையில் போதைப்பொருள் விநியோகத்தை முன்னெடுத்து

‘குடு அசங்க’ ஹெரோயினுடன் கைது Read More »

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது!

 பாறுக் ஷிஹான் அம்பாறை நகரில் தங்குமிடம் ஒன்றின் மறைவில் ரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைத்துள்ளதுடன்  அங்கு முகாமையாளராக  பணியாற்றிய நபர் உட்பட பெண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். அம்பாறை தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து  உளவாளி ஒருவரைப் பயன்படுத்தி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட பொறி நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட விடுதி முகாமையாளர் அக்கரைப்பற்றுப் பகுதியைச் சேர்ந்தவர்

அம்பாறையில் ரகசியமாக இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: பெண் உட்பட இருவர் கைது! Read More »

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் -இம்ரான் எம்.பி

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். திருகோணமலையின் அடுத்த கிரிக்கெட் நட்சத்திரங்களை உருவாக்கும் புதிய அத்தியாயமாக உள்ளதாக (25) கிண்ணியாவில் இடம் பெற்ற கடினப் பந்து போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் தெரிவித்த அவர்   கிண்ணியா பிரீமியர் லீக் (KPL) கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் தொடக்கத்தை

எதிர்காலத்தில் இலங்கை பிரீமியர் லீக் (LPL) மற்றும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து உருவாக்க வேண்டும் -இம்ரான் எம்.பி Read More »

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துதல்

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக்கலாசாரம்- கிளீன் ஸ்ரீலங்கா ” தேசிய செயற்பாட்டை  நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட மேலதிக அரசாங்க எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் நேற்று (24) மாவட்ட  செயலக உப ஒன்றுகூடல்  மண்டபத்தில் நடைபெற்றது.  இதன்போது, 2026 ஜூலை 27 முதல் ஜூலை 31 வரை “நேர்மை வாரமாக” பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதுடன், நேர்மை வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், ஜூலை 28 ஆம் திகதி காலை 9.00மணிக்கு நேர்மை கலாசாரத்தை ஊக்குவிக்கும்

நேர்மையான அரச சேவைக்கான “நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயல்பாட்டை நடைமுறைப்படுத்துதல் Read More »

29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிருமனிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடியில் 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட தபாலகம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இன்று சனிக்கிழமை (25.07.2026) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தின்போது முற்றாக அழிவடைந்திருந்த களுவாஞ்சிக்குடி தபாலகம் இதுவரை காலமும் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்திருந்தது. இத்தபாலகத்திற்குரிய நிலப்பரப்பு இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்திருந்த நிலையில் அது அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டு தற்போது 29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக

29.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் களுவாஞ்சிகுடியில் புதிதாக நிருமனிக்கப்பட்ட தபாலகம் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவினால் திறந்து வைப்பு. Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்!

3,398 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படுகின்றன; 3 நாட்களுக்கு 9 அமர்வுகளாக நடைபெறும் பிரமாண்ட நிகழ்வு – பாறுக் ஷிஹான் –இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றிலிருந்து தொடர்ந்து வரும் ஜூலை 26 மற்றும் 27 ஆகிய மூன்று நாட்களுக்கு ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களையும்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா ஒலுவிலில் இன்று கோலாகல ஆரம்பம்! Read More »

நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 99 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அழிப்பு!

புத்தளம்: மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, அழிக்க உத்தரவிடப்பட்டிருந்த 99 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இன்று (25) காலை பலத்த பாதுகாப்புடன் அழிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டன. நீதிமன்றத்தில் சான்றாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த 99 கிலோகிராம் 478 கிராம் ஹெரோயின் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களே இவ்வாறு அழிக்கப்படவுள்ளன. இப்போதைப்பொருட்கள் அனைத்தும் புத்தளம் மாவட்டத்தின் வனாதவில்லு – லேக்டோவத்தை பகுதியில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள தகன உலையில் (Incinerator) தீயிட்டு முழுமையாக அழிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட

நீதிமன்ற அனுமதியுடன் சுமார் 99 கிலோ ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அழிப்பு! Read More »

நீட் தேர்வு போராட்ட களத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக அரண் அமைத்து உலகளவில் கவனம்

நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் போராட்டக் களங்களில், மாணவிகளும் இளம் பெண்களும் முன்வரிசையில் நின்று காட்டி வரும் வீரம் மற்றும் துணிச்சல் உலக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் சென்னை, மும்பை என நாட்டின் பல்வேறு முதன்மை நகரங்களிலும் மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இப்போராட்டங்களின் போது அடக்குமுறைகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகளுக்கு அஞ்சாது, சக

நீட் தேர்வு போராட்ட களத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக அரண் அமைத்து உலகளவில் கவனம் Read More »

சம்மாந்துறையில் புதிய விவசாய வீதி திறப்பு! பாதுகாப்பான நெல் களஞ்சியசாலை அமைக்க பி.ச. பிரதிநிதி நபாஸ் வலியுறுத்தல்!

சம்மாந்துறையில் இயங்கி வரும் உதவி விவசாயப் பணிப்பாளர் காரியாலயத்திற்கு நிரந்தரக் கட்டிடம் அமைப்பதற்கும், விதை உற்பத்தி மற்றும் நெல் சேமிப்பிற்காகப் பாதுகாப்பான களஞ்சியசாலையை உடனடியாகக் கட்டுவதற்கும் அரசாங்கம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை ஒருங்கிணைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான வை.பீ.எம். நபாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். சம்மாந்துறை நெல்லுச் சேனைக் கண்டம் விவசாயிகளின் நீண்டகாலப் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய கிழக்கு மாகாண விவசாய வீதி திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. அம்பாறை

சம்மாந்துறையில் புதிய விவசாய வீதி திறப்பு! பாதுகாப்பான நெல் களஞ்சியசாலை அமைக்க பி.ச. பிரதிநிதி நபாஸ் வலியுறுத்தல்! Read More »

இலங்கை போதைப்பொருள் குற்றவாளிகள் இருவர் தனுஷ்கோடியில் கைது: 3 லட்சம் கொடுத்து கள்ளப்படகில் தப்பிய அதிர்ச்சி பின்னணி!

இலங்கையில் ஹெரோயின், கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த இருவர், சட்டவிரோதமாகப் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றபோது தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரைப் பகுதியில் இலங்கையிலிருந்து வந்த கள்ளப் படகில் இருந்து இருவர் இறங்குவதாக இந்தியக் கடலோரக் காவல் குழுமப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேற்கொண்ட

இலங்கை போதைப்பொருள் குற்றவாளிகள் இருவர் தனுஷ்கோடியில் கைது: 3 லட்சம் கொடுத்து கள்ளப்படகில் தப்பிய அதிர்ச்சி பின்னணி! Read More »