admin

தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவிகள் வரலாற்றுச் சாதனை!

ஹஸ்பர் ஏ.எச்- கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் சிறப்பான ஆற்றலை வெளிப்படுத்தி, இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று முதலிடத்தைக் கைப்பற்றியுள்ள தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவிகளுக்கு Jeyakumaran’s Global Foundation அமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரமுகருமான குமார் ஜெயக்குமரன் தனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (26) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாண வலைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்து

தம்பலகாமம் குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவிகள் வரலாற்றுச் சாதனை! Read More »

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம்.

(க.சரவணன்) 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ,இன வெறி வன்முறைகளில் உயிரிழந்தோர், காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில், கறுப்பு ஜூலை நினைவேந்தல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் வெள்ளிக்கிழமை (23)  லண்டனில் நடைபெற்றது. தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, (MSDTE) சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்  (TEPAIJ)     மற்றும் பல தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ரகத்திற்கு முன்பாக  (13 Hyde Park

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கோரி லண்டனில் இலங்கை தூதரகத்தின் முன் கறுப்பு 83 ஜூலை போராட்டம். Read More »

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா

மயோன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் 40ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டும், சிலோன் மீடியா போரத்தின் (Ceylon Media Forum) 7ஆம் ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் முகமாகவும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான விசேட இரு நாள் ஊடகச் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய இந்தச் சுற்றுலா எதிர்வரும் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாடும்,

கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான 2 நாள் ஊடகச் சுற்றுலா Read More »

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் 2ஆவது நாள் அமர்வு ஞாயிற்றுக்கிழமை (26) ஒலுவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (ஜூலை 25) ஒலுவிலிலுள்ள பல்கலைக்கழகத்தின் ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறும் இப்பட்டமளிப்பு விழா நாளை திங்கட்கிழமை (27) நிறைவடையும். 3,398 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்ஒன்பது தனித்தனி அமர்வுகளாக (Sessions) நடைபெறவுள்ள இவ்விழாவில், பல்கலைக்கழகத்தின்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா- 2ஆவது நாள் அமர்வு Read More »

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வழிகாட்டுதலின் கீழ், மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் நாங்கள் சேவை செய்கிறோம் எனும் திட்டத்தின் கீழ் மிகவும் பின்தங்கிய வவுணதீவு பன்சேனை கிராமத்தில் இலவச மருத்துவ சிகிச்சை முகாம் நேற்று சனிக்கிழமை (25) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது மட்டக்களப்பு ஸ்பெக்ட்ரம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் ஞா. நவீகரன்  PMJF. PMAF தலைமையில் பன்சேனை ஆரம்ப மருத்துவ  சிகிச்சை நிலையத்தில் இடம்பெற்றது இதில் அதிதிகளாக லயன்ஸ் கழகத்தின்  மாவட்ட ஆளுநர் லயன் யி.ஷாஹிர்

மட்டு லயன்ஸ் கழகத்தின் ‘நாங்கள் சேவை செய்கிறோம்’ எனும் தொனிப் பொருளில் பன்சேனையில் இலவச மருத்துவ முகாம் Read More »

திருக்கோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக பொறியியலாளர் க.அருள்வரதராஜா பதவியேற்பு

ஹஸ்பர் ஏ.எச்- திருக்கோணமலை ரோட்டரி கழகத்தின் *48வது தலைவராக க. அருள்வரதராஜா* அவர்கள், *2026 ஜூலை 25 ஆம் தேதி சனிக்கிழமை, திருக்கோணமலையிலுள்ள டைக் வீதியில் அமைந்துள்ள ரோட்டரி இல்லத்தில் நடைபெற்ற கௌரவமிக்க பதவியேற்பு விழாவில் உத்தியோகபூர்வமாகப் பதவியேற்றார். இந்நிகழ்வு, *”Create Lasting Impact” (நிலைத்த தாக்கத்தை உருவாக்குவோம்)** என்ற ரோட்டரி சர்வதேசத் தலைவரின் 2026–2027 ஆண்டுச் செய்தியை முன்னிறுத்தி புதிய ரோட்டரி ஆண்டின் ஆரம்பத்தை குறித்ததுடன், நிலையான சேவை, அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மற்றும் சமூகத்தில் நீடித்த

திருக்கோணமலை ரோட்டரி கழகத்தின் 48வது தலைவராக பொறியியலாளர் க.அருள்வரதராஜா பதவியேற்பு Read More »

திருகோணமலையில் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம்

ஹஸ்பர் ஏ.எச்- கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதம் இன்று (26) இடம்பெற்றது. திருகோணமலை மக்கள் சமூக செயற்பாட்டாளர் உண்ணாவிரத வேந்தன் இதனை ஏற்பாடு செய்தார். இதில் பிரதானமாக ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அதற்கு தீர்வு கோரியும் உண்ணாவிரதம் இருந்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும், அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட வெடி மருந்து மற்றும் சுருக்கு வலைகளை

திருகோணமலையில் ஏழு கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரதம் Read More »

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி 

ஹஸ்பர் ஏ.எச்- ஜெயக்குமரன்ஸ் குளோபல் பவுண்டேசன்(Jeyakumaran’s Global Foundation) ஏற்பாட்டில், திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று(26) திருகோணமலை தி/சிறீ விபுலானந்தா கல்லூரி மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில், அனுபவமிக்க கல்வியாளர்கள் மற்றும் வளவாளர்கள் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடவிளக்கம், வினாத்தாள் அணுகுமுறை, நேர முகாமைத்துவம், கற்றல் உத்திகள் மற்றும் ஊக்கமளிக்கும்

திருகோணமலை மாவட்ட மாணவர்களுக்கான இலவச 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வழிகாட்டல் நிகழ்ச்சி  Read More »

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கேற்பற்ற வானிலை: மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (26) மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் வானிலை குறித்த முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கேற்பற்ற வானிலை: மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை! Read More »

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்: பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் அவசர கோரிக்கை!

கொழும்பு: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பெற்றோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தீவிர வலியுறுத்தல் விடுத்துள்ளனர். குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கும் பொன்னான வாய்ப்பை இழந்து, அவர்களின் உயிரை வீணாக ஆபத்தில் தள்ள வேண்டாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் பிரதீப் ரத்னசேகர பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது டெங்கு

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தாமதிக்காமல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்: பெற்றோருக்கு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலைப் பணிப்பாளர் அவசர கோரிக்கை! Read More »