பாரம்பரிய கலைகளின் சங்கமம்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய கலைகளின் சங்கமம் நிகழ்வு வெள்ளிக்கிழமை(16.10.2026) மாலை மட்டக்களப்பு களுதாவளை கலாசார மண்டபத்தில் ஆரம்பமாகியது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், விவசாயம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி.எஸ்.அமலநாதன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன், மாவட்ட கலாசார உத்தியோகஸ்த்தர் எம்.சிவானந்தராஜா, சிரேஸ்ட மற்றும் இளம் கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், உத்தியோகஸ்த்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், என ஏராளமானோர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதனபோது கிராமிய மண் கமழும் காவடி, கும்மி, பதரம், உடுக்கை, வசந்தன், வில்லுப்பாட்டு, என ஏராளமான கலை நிகழ:வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.

இந்த பாரம்பரிய கலைகளின் சங்கமம் நிகழ்வு தொடற்சியாக இன்று சனிக்கிழமையும் மாலையும் நடைபெற்று நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவு பெறவுள்ளது.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

சட்டம் அனைவருக்கும் சமம் எனில் இலங்கையின் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் — –ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன்—