• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்த நவராத்திரி ஊர்வலம்

கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்த நவராத்திரி ஊர்வலம்

 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இணைந்து கலாசார பிரிவினால் ஏற்பாடு செய்த நவராத்திரி ஊர்வலம் இன்று (18) நடைபெற்றது.
பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி. சங்கரியின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய முன்பாக ஆரம்பித்த ஊர்வலமானது ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் ஆலய மண்டபத்தினை சென்றடைந்தது.
அங்கு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் மாணவர்களின் அறநெறி கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
அறநெறி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்; கௌரவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர் சர்மிளா பிரசாத் அறநெறி பொறுப்பாசிரியர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

சட்டம் அனைவருக்கும் சமம் எனில் இலங்கையின் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் — –ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன்—