• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • மட்டக்களப்பு  நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய 56 வயது திருடன் கைது–

மட்டக்களப்பு  நகரில் வீடு உடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய 56 வயது திருடன் கைது–

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான  8 பவுன் தங்க ஆபரணங்களை திருடிய ஊறணி பகுதியைச் சோந்த 56 வயதுடைய திருடன் ஒருவரை நேற்று சனிக்கிழமை (17) கைது செய்ததுடன் திருடப்பட்ட தங்க ஆபரணங்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியில் உள்ள  வீடு ஒன்றின் உரிமையாளர்கள் கடந்த 14 ம் திகதி பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளனர் இந்த நிலையில் பூட்டியிருந்த வீட்டின் மதில்  மீது    ஏறி குதித்து திருடன் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த மோதிரம், காப்பு, தோடு சங்கிலி உள்ளிட்ட 8 பவுன் தங்க ஆபரணங்கள் மற்றும் கவரிங் ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளான்.

இதையடுத்து பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து  மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் வை.விஜயராஜா தலைமையில் பொலிஸ் கொஸ்தாப்பர்களான 15468  இகலகம, 64832 ரகுமான், 35574 சாமர, 73553 விக்கினதாஸ், 100404 திஸநாயக்கா ஆகியோர் கொண்டு குழுவினர் வீட்டில் பொருத்தியிருந்த சிசிரி கமராவில் பதிவாகிய வீடியோ காட்சியை கொண்டு விசாரணையினை மேற்கொண்டனர்.

இதன்போது ஊறணி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரை கைது செய்ததுடன் திருடப்பட்ட  மோதிரம் ஒன்று, பென்னரள் ஒன்று, தோடு ஒன்றை காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையத்தில் விற்பனை செய்த தங்க ஆபரணங்கள் மற்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களை மீட்டனர்

இதில் கைது செய்யப்பட்டவரை  விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றன

Share the Post:

Related Posts

உள்ளூர் செய்திகள்

சட்டம் அனைவருக்கும் சமம் எனில் இலங்கையின் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் — –ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன்—