• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • சட்டம் அனைவருக்கும் சமம் எனில் இலங்கையின் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் — –ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன்—

சட்டம் அனைவருக்கும் சமம் எனில் இலங்கையின் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தேரர்களை கைது செய்ய வேண்டும் — –ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன்—

((கனகராஜா சரவணன்) )

சட்டம் அனைவருக்கும் சமமானது  எனில் இலங்கையில் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஞானசார தேரருக்கு ஆதரவாக ஆர்பாட்டத்தில் ஈடுபடும் 150  தேரர்களை அரசு முதலில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈரோஸ்; கட்சியின் ஊடக மாநாடு மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (17) இடம்பெற்றது இதில் ஊடகவியலாளர் கேள்வி ஒன்றுக்கு அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

சட்டம் அனைவருக்கும் சமமானது இது தன் கடமையை செய்யும் இதில் ஜனாதிபதியே அவருக்கு உட்பட்ட அரசாங்கம் தலையிடாது என அரசு தெரிவித்துள்ளது எனவே அந்த சட்டத்துக்குள் பிழையான செயற்பாடுகளை செய்து கொண்ட ஞானசாரர் தேரர் உட்பட 64 தேரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த தேரர்களுக்கு ஒரு சட்டம் சாதாரண அப்பாவி பொதுமக்களுக்கு ஒரு சட்டம்,அரசியல்வாதிகளுக்கு ஒரு சட்டம், ஜனாதிபதிக்கு ஒரு சட்டம்  என ஒரு சட்டம் இலங்கையில் இல்லை. இலங்கையில் சட்டம் ஒன்று இருந்த போதும் தேரர்களுக்கு, தனியாகவும் பொதுமக்களுக்கு தனியாகவும் ,அரசியல்வாதிகளுக்கு தனியாக சட்டம் உருவாக்க முடியாது

இந்த ஞானசார தேரருக்கு அதிகமான குற்றச்சாட்டு இருக்கிறது இதனால் அவர் அடைக்கப்பட்டுள்ளார் எனவே அவர் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் சட்டத்தை மதிக்க வேண்டும்.

அதே நேரத்தில் கடந்த ஆட்சியாளர்கள் முதலாம் நம்பர் மோசடிக்காரர்கள் இவர்கள் கொள்ளை கொலை ஆட்கடத்தல் சிறுநீரகம் விற்றவன், கண் தோண்டி விற்றவன் கொலை செய்து சடலத்தை முதலைக்கு சாப்பாடு போட்டவன், எல்லோரும் வரிசையாக சிறைக்குள் விரைவில் போவார்கள்.

அதேவேளை இன்று ஞானசார தேரருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் 150  தேரர்கள்  அடித்து விரட்டும் என ஏனைய இலங்கையில் உள்ள 4 ஆயிரம் தேரர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த தேரர்களை அரசு முதலில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இலங்கையில் அதி உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் இந்த தேரர்கள் இருந்து என்ன இறந்து என்ன?  தேரர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் சட்டங்கள் மதிக்கப்பட வேண்டும் என்றார்.

Share the Post: