கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) காலை 7.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் வினாடிக்கு 130 கன அடி நீர் மகாவலி கங்கையில் திறந்து விடப்படவுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், அதன் இருபுறமும் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அவதானமாக இருக்க வேண்டிய பகுதிகள்:
- உலப்பனே
- கெலியோயா
- கம்பளை
- பேராதனை
- கட்டுகஸ்தோட்டை
குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆற்றைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Post Views: 10




