August 5, 2026

இரத்மலானையில் பரபரப்பு: வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு வீச்சு!

கொழும்பு – இரத்மலானை பகுதியில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து நபர் ஒருவரால் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இரத்மலானையில் பரபரப்பு: வீடொன்றை இலக்கு வைத்து கைக்குண்டு வீச்சு! Read More »

கினிகத்தெனை பொல்பிட்டியாவில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

நுவரெலியா மாவட்டம் கினிகத்தெனை, பொல்பிட்டியா பகுதியில் இடம்பெற்ற திடீர் மண்மேடு சரிவு விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் மண்ணுக்குள் புதையுண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று இரவோடு இரவாக வீடொன்றின் மீது அருகிலிருந்த மண்மேடு திடீரெனச் சரிந்து விழுந்துள்ளது. இதன்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் மண் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். சம்பவம் குறித்துத் தகவலறிந்த பொலிஸார், இராணுவத்தினர் மற்றும்

கினிகத்தெனை பொல்பிட்டியாவில் வீட்டின் மீது மண்மேடு சரிந்து சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி! Read More »

இலங்கை வங்கியின் 87வது ஆண்டு நிறைவு விழா : மட்டக்களப்பு கிளையில் சிறப்பான கொண்டாட்டம்!

1939ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இலங்கை வங்கி, தனது 87 ஆண்டுகால நம்பிக்கையான சேவையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. தற்போது தீவு முழுவதும் உள்ள 331 பிரதேச செயலகப் பிரிவுகளையும் உள்ளடக்கி 2,500க்கும் மேற்பட்ட சேவை மையங்கள் மற்றும் நவீன டிஜிட்டல் வங்கிச் சேவைகளுடன் (BOC Flex) லட்சக்கணக்கான இலங்கை மக்களுக்குத் தொடர்ந்து சேவை வழங்கி வருகின்றது.

இலங்கை வங்கியின் 87வது ஆண்டு நிறைவு விழா : மட்டக்களப்பு கிளையில் சிறப்பான கொண்டாட்டம்! Read More »

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது: ரூ. 14,700 பணமும் பொலிஸாரால் பறிமுதல்

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கண்டறியும் நோக்கில், அம்பாறை பிராந்தியப் பொறுப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேடமுல்லவின் வழிகாட்டலில் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, அம்பாறை பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் முதித பிரியங்கரவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் செவ்வாய்க்கிழமை (04) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் அம்பாகஹவெல்ல பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய

‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது: ரூ. 14,700 பணமும் பொலிஸாரால் பறிமுதல் Read More »

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம், நிந்தவூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ச்சியாக வீசி வரும் பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை காரணமாகப் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல்நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளதாகப் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இயற்கை சீற்றத்தின் திடீர் மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக நிந்தவூர் விவசாயப் பிரிவுப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. பால் பிடிக்கும் பருவத்திலும், வளர்ந்த

தொடர் காற்று, மழையால் மூழ்கிய நிந்தவூர் வயல் நிலங்கள்- விவசாயிகள் பெரும் கவலை Read More »

கனடா வேலைவாய்ப்பு மோசடி: எத்தியோப்பியாவில் சித்திரவதைக்குள்ளான இலங்கை இளைஞர்கள் மீட்பு — கிளிநொச்சியில் பிரதான சந்தேகநபர் கைது!

கனடாவில் வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி இலங்கையர்களை எத்தியோப்பியாவிற்கு அழைத்துச் சென்று கடத்தி, சித்திரவதை செய்து கப்பம் கோரிய பெரும் கடத்தல் வலையமைப்பை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முறியடித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய கிளிநொச்சியைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இலங்கை அழைத்து வரப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள்: கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி சந்தேகநபருக்கும் எத்தியோப்பிய குற்றக் கும்பலுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

கனடா வேலைவாய்ப்பு மோசடி: எத்தியோப்பியாவில் சித்திரவதைக்குள்ளான இலங்கை இளைஞர்கள் மீட்பு — கிளிநொச்சியில் பிரதான சந்தேகநபர் கைது! Read More »

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு: மகாவலி கங்கையை அண்டிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) காலை 7.00 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வினாடிக்கு 130 கன அடி நீர் மகாவலி கங்கையில் திறந்து விடப்படவுள்ளதாக நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், அதன் இருபுறமும் உள்ள தாழ்நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவதானமாக இருக்க வேண்டிய பகுதிகள்: குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும்

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று திறப்பு: மகாவலி கங்கையை அண்டிய மக்களுக்கு அவசர எச்சரிக்கை! Read More »

தாய்லாந்தில் இருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி திடீர் சரிவு: பயணிகள் பீதி!

தாய்லாந்தின் புக்கெட் (Phuket) நகரில் இருந்து நாட்டின் தலைநகர் புது தில்லி நோக்கி வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரெனக் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் (Turbulence) சிக்கி, சில விநாடிகளில் சுமார் 300 அடி தூரம் கீழே இறங்கியதால் விமானத்திற்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புக்கெட்டில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட குறித்த போயிங் விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோசமான வானிலை மற்றும் கடுமையான காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியது. இதில் விமானத்தின் கட்டுப்பாட்டில்

தாய்லாந்தில் இருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் 300 அடி திடீர் சரிவு: பயணிகள் பீதி! Read More »

காலாவதியான மருந்துகள், அழகுசாதனப் பொருட்களை விற்ற நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்: மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு!

கொழும்பில் காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் முறையான லேபிள் தகவல்கள் இல்லாத அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காகச் சேமித்து வைத்திருந்த கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்றிற்கும், அதன் பணிப்பாளருக்கும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ரூ. 1 இலட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினரால் (CAA) கடந்த மே மாதம் 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, குறித்த நிறுவனத்திலிருந்து 640-க்கும் மேற்பட்ட காலாவதியான ஆயுர்வேத மருந்துகளும், கட்டாய

காலாவதியான மருந்துகள், அழகுசாதனப் பொருட்களை விற்ற நிறுவனத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்: மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவு! Read More »