admin

கடும் வரட்சியால் கல்மெடியாவ குளங்கள் வறண்டு போனதால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்- திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பகுதியில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, கல்மெடியாவ பகுதியில் அமைந்துள்ள இரு குளங்களிலும் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. எல் நினோ தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பிரதேசத்தில் நீர்நிலைகள் படிப்படியாக வற்றிவரும் நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குளங்களில் போதியளவு நீர் இல்லாததால் கால்நடைகளுக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதிலும், அவற்றை பராமரிப்பதிலும் சிக்கல்கள்

கடும் வரட்சியால் கல்மெடியாவ குளங்கள் வறண்டு போனதால் கால்நடை வளர்ப்போர் பாதிப்பு Read More »

அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம் – கடந்த 26 ஆம் திகதி திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் நடைபெற்ற ரேடியோ மீலாத் நிகழ்வின்  போது, பாடசாலையின் கேட்போர் கூடத்திற்குத் தேவையான ஒலிபெருக்கி மற்றும் ஒலிவாங்கி உள்ளிட்ட ஒலி உபகரணங்களை, சுமார் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியில் அல்ஹாஜ் அபூஹர் அவர்கள் அன்பளிப்பாக வழங்கி அன்றைய தினமே பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார். அத்துடன், பாடசாலையின் உயர்தர வர்த்தகப் பிரிவுக்குத் தேவையான செலவினங்களுக்காக 20 இலட்சம் ரூபாய் நிதியையும் அல்ஹாஜ்

அஸ்ஹர் மத்திய கல்லூரிக்கு பல்வேறு உதவிகள் வழங்கி வைப்பு Read More »

மட்டக்களப்பில் “Voice to Policy” கலந்துரையாடல்: இளைஞர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு குறித்து சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத் பங்கேற்பு

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Voice to Policy” கலந்துரையாடல் தொடர் நிகழ்வின் இரண்டாவது நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்காக (29.08.2026) நேற்றையதினம் மட்டக்களப்பு ‘East Lagoon’ ஹோட்டலில் நடைபெற்றது. இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் அவர்கள், கலந்து கொண்டு தனது ஆக்கபூர்வமான கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். CII (Coalition for Inclusive Impact) நிறுவனம் அனுசரணையில் இளைஞர் பிரதிநிதிகளின்

மட்டக்களப்பில் “Voice to Policy” கலந்துரையாடல்: இளைஞர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு குறித்து சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத் பங்கேற்பு Read More »

வாகன விபத்தில் தம்பலகாமத்தை சேர்ந்த இளைஞன் ஸ்தலத்தில் பலி

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் நேருக்கு நேர் மோதியதில் பலியாகியுள்ளார்  குறித்த சம்பவம் (29) மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த இளைஞர் வயது (24) தம்பலாகாமம்,பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரியவருகிறது. ……………………………  குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது மோட்டார் சைக்கிள் மூலம் திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு

வாகன விபத்தில் தம்பலகாமத்தை சேர்ந்த இளைஞன் ஸ்தலத்தில் பலி Read More »

தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வெட்டாத்து பாலம் புனரமைக்கப்பட்டது _காபட் வீதியின் ஒரு பகுதி கொங்ரீட் வீதியாக புனரமைப்பு 

A.H.HASFAR HASFAR மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த தம்பலாகாமம் கோயிலடி வைத்தியசாலை _தாயிப் நகர் வெட்டாத்து பால வீதி கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டது.குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாமை குறித்து ஊடகங்களில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி மேற்கொண்ட முயற்சியின் பயனாக கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியானது ஒவ்வொரு மாரி மழை காலங்களிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கூடியதாகும். தற்போது குறித்த வீதியின்

தம்பலகாமம் தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வெட்டாத்து பாலம் புனரமைக்கப்பட்டது _காபட் வீதியின் ஒரு பகுதி கொங்ரீட் வீதியாக புனரமைப்பு  Read More »

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா 28.08.2026ம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகப் 05 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அன்னையின் இறுதி நாள் திருப்பலி எதிர்வரும் செப்ரம்பர -06ம் திகதி காலை நிறைவு பெறவுள்ளது யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில்,திருகோணமலை மறைமாவட்ட ஆயர்பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினால் திருவிழா இறுதி நாள் திருப்பலி செப்ரம்ர் – 06ம் திகதி

மட்டு. ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் Read More »

நெல் உமிக்குள் மறைத்து பாலை மரக்குற்றிகள் கடத்தல்: கிளிநொச்சியில் லொறியுடன் சாரதி கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் நெல் உமிக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக் குற்றிகளை மறைத்து யாழ்ப்பாணத்திற்கு கடத்த முயன்ற பார ஊர்தி ஒன்றைப் பொலிஸார் சுற்றிவளைத்துப் பறிமுதல் செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று பிற்பகல் (28) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இந்த முறியடிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. முக்கிய தகவல்கள்: சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல் உமிக்குள் மறைத்து பாலை மரக்குற்றிகள் கடத்தல்: கிளிநொச்சியில் லொறியுடன் சாரதி கைது! Read More »

மண்முனை தென்மேற்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிரடி வலியுறுத்தல்!

மண்முனை தென்மேற்கு பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் நீண்டகால அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க. பிரபு தலைமையில் நேற்று (28.08.2026) நடைபெற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், வைத்தியர் இ. சிறிநாத், பிரதேச சபை பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். முக்கிய முன்வைக்கப்பட்ட

மண்முனை தென்மேற்கு மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு: ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அதிரடி வலியுறுத்தல்! Read More »

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரிப்பு: ப்ரிமா, செரண்டிப் நிறுவனங்கள் அறிவிப்பு

நாட்டில் கோதுமை மா விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களான ப்ரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகியன கோதுமை மாவின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளன. இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பானது இன்று (29) முதல் நடைமுறைக்கு வருகிறது. சந்தை நிலவரங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த விலை உயர்வை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாண்

கோதுமை மாவின் விலை கிலோவுக்கு 17 ரூபாவால் அதிகரிப்பு: ப்ரிமா, செரண்டிப் நிறுவனங்கள் அறிவிப்பு Read More »

படுவான்கரையை மையப்படுத்தி சுற்றுலா நீதிமன்றம்: மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் நீதி அமைச்சரிடம் கோரிக்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரு நிலம் என்றழைக்கப்படும் படுவான்கரைப் பகுதி மக்களின் நன்மை கருதி படுவான்கரை பகுதியை மையப்படுத்தியதாக சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை அமைத்துத் தருமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளதாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானும் மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவருமாகி கலாநிதி உ.உதயகாந்த் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார். நீதி அமைச்சருக்கு கேரிக்கை முன்வைத்து,

படுவான்கரையை மையப்படுத்தி சுற்றுலா நீதிமன்றம்: மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் நீதி அமைச்சரிடம் கோரிக்கை!! Read More »