நாட்டில் கோதுமை மா விநியோகத்தில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களான ப்ரிமா (Prima) மற்றும் செரண்டிப் (Serendib) ஆகியன கோதுமை மாவின் விலையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் உயர்த்தியுள்ளன.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை அதிகரிப்பானது இன்று (29) முதல் நடைமுறைக்கு வருகிறது.
சந்தை நிலவரங்கள் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இந்த விலை உயர்வை நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பாண் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலைகளிலும் மாற்றம் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post Views: 28




