வாகன விபத்தில் தம்பலகாமத்தை சேர்ந்த இளைஞன் ஸ்தலத்தில் பலி

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீமெந்து குழைக்கும் கனரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் நேருக்கு நேர் மோதியதில் பலியாகியுள்ளார் 

குறித்த சம்பவம் (29) மாலை இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் வயது (24) தம்பலாகாமம்,பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் எனவும் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிபவர் எனவும் தெரியவருகிறது.

……………………………

 குறித்த விபத்து தொடர்பில் தெரியவருவதாவது மோட்டார் சைக்கிள் மூலம் திருகோணமலை நோக்கி சென்ற இளைஞனே இவ்வாறு கனரக வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளக்கியுள்ளார்.

 குறித்த விபத்து சம்பவம் திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் தம்பலகாம  பிரதேசத்துக்குட்பட்ட ஜெயபுர   என்னும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சடலம் தற்போது கந்தளாய் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Share the Post: