A.H.HASFAR HASFAR
மிக நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த தம்பலாகாமம் கோயிலடி வைத்தியசாலை _தாயிப் நகர் வெட்டாத்து பால வீதி கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டது.குறித்த வீதி ஊடாக பயணிக்க முடியாமை குறித்து ஊடகங்களில் பல முறை சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி மேற்கொண்ட முயற்சியின் பயனாக கொங்ரீட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியானது ஒவ்வொரு மாரி மழை காலங்களிலும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கூடியதாகும்.
தற்போது குறித்த வீதியின் இரு பகுதியையும் இணைக்கும் வீதி காபட் வீதியாக இருந்த போதிலும் கொங்ரீட் வீதியாக உடைந்த பகுதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
நிரந்தரமாக புனரமைப்பு செய்ய வேண்டுமாயின் குறித்த பகுதியில் சிறிய பாலம் அமைத்து புனரமைக்கப்பட வேண்டும்.ஆனால் வீதி அபிவிருத்தி என்பது திட்டமிட்டு புனரமைக்கப்பட வேண்டும் இல்லாது போனால் எதிர்வரும் மாரி மழைக்கு இவ் கொங்ரீட் வீதி தாக்கு பிடிக்காது என்பது பலரதும் கருத்தாகும்.






