கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற மட்டக்களப்பு, ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் 72வது ஆண்டுத் திருவிழா 28.08.2026ம் திகதி நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகப் 05 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
அன்னையின் இறுதி நாள் திருப்பலி எதிர்வரும் செப்ரம்பர -06ம் திகதி காலை நிறைவு பெறவுள்ளது
யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் பேரருட்தந்தை அன்டனி ரஞ்சித் ஆண்டகை தலைமையில்,
திருகோணமலை மறைமாவட்ட ஆயர்
பேரருட்தந்தை கிறிஸ்டியன் நோயல் இமானுவேல் ஆண்டகையினால் திருவிழா இறுதி நாள் திருப்பலி செப்ரம்ர் – 06ம் திகதி காலை 7.00 மணியளவில் நிறைவேற்றப்படும்

பாதுகாப்பு வசதிகளை வவுணதீவு மற்றும் கரடியனாறு பொலிஸார் வழங்குவதுடன் விஷேட போக்குவரத்து சேவை மட்டக்களப்பு பஸ் நிலையத்திலிருந்து வவுணதீவு ஊடாக ஆயித்தியமலைக்கும் மற்றும் செங்கலடியில் இருந்து கரடியனாறு ஊடாக ஆயித்தியமலைக்கும் மேற்கொள்ள, அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் தலைமையில் இடம் பெற்ற இரு கூட்டத் தீர்மானங்களின்படி போக்குவரத்து சேவை இடம் பெறவுள்ளது.
வருடந்தோறும் நடைபெறும் புனித சதா சகாய அன்னையின் பாதயாத்திரை வழமைபோன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திலிருந்து செப்ரம்பர் 05 ம் திகதி சனிக்கிழமை காலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி வவுணதீவு பாதை ஊடாக ஆயித்தியமலைக்கும், அதேநேரம் செங்கலடி சந்தியிலிருந்து காலை 5.00 மணிக்கு ஆரம்பமாகி கரடியனாறு ஊடாக ஆயித்தியமலைக்கும் இரு வழியாக யாத்திரையாக செல்லும் எனவும் அருட் தந்தை ஜெரிஸ்டன் வின்சென்ட் தெரிவித்தார்.




