களுவாஞ்சிக்குடியில் 22 வயது இளம் குடும்பப் பெண் விபரீத முடிவு: அவசரத் திருமணங்களும் மன உறுதியின்மையுமே காரணமா? இளைஞர்களுக்கான விழிப்புணர்வுப் பதிவு
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர், குடும்பத் தகராறு காரணமாக விபரீத முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வேணுக்கன் சுமேதா (22 வயது) என்ற இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சுமேதா, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் (தனது 18 ஆவது வயதில்) இளைஞர் ஒருவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரது கணவர் வேறொரு










