அளுத்கமவில் பரபரப்பு; சொகுசு விடுதிக்கு பின்னால் துண்டிக்கப்பட்ட மனித தலை மீட்பு – பொலிஸார் தீவிர விசாரணை!
இலங்கையின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான அளுத்கம, மொரகல்ல கடற்கரைப் பகுதியில் உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் மனித தலை ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மொரகல்ல பகுதியில் அமைந்துள்ள முன்னணி சொகுசு சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறக் கடற்கரையில் இன்று (23) காலை மனித தலை ஒன்று அலைகளால் அடித்து வரப்பட்டு ஒதுங்கியுள்ளது. கடற்கரையில் கிடந்த விசித்திரமான பொருளை அவதானித்தவர்கள், அது மனித தலை என்பதை அறிந்து உடனடியாக அளுத்கம










