இலங்கையில் இன நல்லிணக்கத்தையும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் நோக்கில், சுவிஸ் உதயம் (Swiss Uthayan) தமிழ் அமைப்பினால் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள மொழிமூல மாணவர்களுக்கு கணினிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட முகந்தெனிய சிங்கள வித்தியாலய மாணவர்களின் கணினித் தொழில்நுட்பக் கல்விச் செயற்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டே, இவ்வமைப்பினால் இரண்டு கணினிகள் நேற்று முன்தினம் (20ஆம் திகதி புதன்கிழமை) உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவரும், ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளருமான மு.விமலநாதன் தலைமையில் இந்கழ்வு பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்:
- க.துரைநாயகம் (தாய்ச்சங்கப் பொருளாளர் மற்றும் இலங்கைக்கான இணைப்பாளர் / சமூகசேவகர்)
- பாவாணர் அக்கரைப்பாக்கியன் (செயலாளர்)
- எஸ். கருஸ்ராஜ் (பொருளாளர்)
- கண வரதராஜன் (உபதலைவர் / ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்)
- சா.நடனசபேசன் (பிரதிச்செயலாளர் மற்றும் ஊடகவியலாளர்)
- இ.ஜீவராஜ் கண்ணன் (அமைப்பின் உறுப்பினர் / அதிபர்)
இவர்களுடன் முகந்தெனிய சிங்கள வித்தியாலயத்தின் அதிபர் கே.ராமநாயக்க, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தமிழ் அமைப்பொன்று, சிங்கள மொழிமூல கிராமப்புற மாணவர்களின் கல்வித் தேவையறிந்து இந்த உதவிகளை வழங்கியமையானது, பிரதேச மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது










