admin

காத்தான்குடியில் மின்னொளிப் பந்துவீச்சு: சம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்றது ஏறாவூர் YSSC!

காத்தான்குடி: காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலை ஹிஸ்புல்லாஹ் விளையாட்டு மைதானத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. காத்தான்குடி கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் என்.கே.எம். அரபாத் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியைப் பார்க்க பெருமளவிலான ரசிகர்கள் திரண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 41 கால்பந்தாட்டக் கழகங்கள் பங்கேற்ற, அணிக்கு 7 பேர் கொண்ட இச்சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஏறாவூர் YSSC (B) கழகமும், ஏறாவூர் FC

காத்தான்குடியில் மின்னொளிப் பந்துவீச்சு: சம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்றது ஏறாவூர் YSSC! Read More »

30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் ஓய்வுபெற்றார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி: விமர்சையான பிரியாவிடை நிகழ்வு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியில் இருந்து ஓய்வுபெறும் திருமதி கலாரஞ்சினி கணேசலிங்கம் அவர்களைக் கௌரவிக்கும் பாராட்டு மற்றும் விடைபெறும் நிகழ்வு நேற்று (27.06.2026) வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சுகாதாரத் துறையில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக (30 ஆண்டுகள்) அவர் ஆற்றிய அளப்பரிய சேவையைப் பாராட்டும் முகமாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முக்கிய விருந்தினர்கள் மற்றும் கௌரவிப்புஇந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் பணியாளர் நாயகம் அசேல குணவர்த்தன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், அவரது

30 ஆண்டுகால அர்ப்பணிப்புடன் ஓய்வுபெற்றார் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கலாரஞ்சினி: விமர்சையான பிரியாவிடை நிகழ்வு! Read More »

மட்டக்களப்பு வெள்ளைப் பாலத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் பொருட்டு, இப்பாதையினூடான பயணங்களைத் தற்காலிகமாகத் தவிர்த்து, மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

மட்டக்களப்பு வெள்ளைப் பாலத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் அனைவரும் உடனடியாக மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். Read More »

கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதுமாலெப்பை எம்.பி.யின் புதிய முயற்சி

—————————————————————— திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் 2026 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை-04 பகுதியில் பெண்களின் சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் கீழ், ரூ. 4 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், ஹுசைனிய்யா நகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த 16 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றதுடன், பிரதேச

கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதுமாலெப்பை எம்.பி.யின் புதிய முயற்சி Read More »

வரலாற்றுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி: தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர்!

உலகக் கால்பந்து அரங்கில் ஆர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி புதியதொரு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளார். சர்வதேச கால்பந்து கிண்ணத் தொடரில், தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். ஜோர்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், ஆர்ஜென்டினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆர்ஜென்டினா அணி ஆதிக்கம் செலுத்தியதுடன்,

வரலாற்றுச் சாதனை படைத்தார் மெஸ்ஸி: தொடர்ந்து 7 போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர்! Read More »

தேசிய முன்னேற்றத்திற்கு கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

அறிவு, திறமை மற்றும் ஆற்றல்மிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு உயர்கல்வி துறையின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் வலுப்படுத்தல் மிகவும் அவசியமானது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற இலங்கை ஒன்றிணைந்த பொறியியலாளர் நிறுவனத்தின் (IIESL) 48 ஆவது வருடாந்த அமர்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேசிய அபிவிருத்தியில் பொறியியல் வல்லுநர்கள் ஆற்றும் பங்களிப்பை பாராட்டிய பிரதமர், பொறியியல்

தேசிய முன்னேற்றத்திற்கு கூட்டு முயற்சியும் அர்ப்பணிப்பும் அவசியம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய Read More »

முதியோர் உதவித்தொகை: அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக அரசாங்கத்தின் விசேட திட்டம் ஆரம்பம்!

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தினால், அரசாங்கத்தின் மாதாந்த முதியோர் உதவித்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் உள்ள குறைந்த வருமானம் கொண்ட மூத்த குடிமக்களுக்காக, விசேட அடையாள அட்டை வழங்கும் புதிய திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கிராமிய வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் உள்ள தேசிய முதியோர் செயலகம், ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. தற்போது 70 வயது

முதியோர் உதவித்தொகை: அடையாள அட்டை இல்லாதவர்களுக்காக அரசாங்கத்தின் விசேட திட்டம் ஆரம்பம்! Read More »

உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சி!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் இன்று (28) மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளன. சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 69.23 அமெரிக்க டொலராகவும், பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.99 அமெரிக்க டொலராகவும் பதிவாகியுள்ளது. இவற்றுடன் இணைந்து இயற்கை எரிவாயுவின் விலையும் சரிவைச் சந்தித்து 3.279 அமெரிக்க டொலராகக் காணப்படுகிறது. உலகளாவிய எரிசக்தி தேவை மாற்றம் மற்றும் உற்பத்தி நிலவரங்களே

உலக சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைகள் வீழ்ச்சி! Read More »

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு ஆரம்பம்

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, ,லங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ ,ன்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில்  கம்பன்கழக   கம்பவாரி ஜெயராஜ்  ஆரம்பித்து வைத்துள்ளார். அகண்ட தமிழ்  உலகம் அமைப்பின் ஏற்பாட்டில் மனித விழுமியங்களின் உன்னத கூறுகளான அறம், பொருள், ,ன்பம் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துரைத்து, எல்லோரலாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது மறையாக விளங்கும் திருக்குறளை மையப்படுத்தி ‘உலகளாவிய அறப்பாதைக்கு வள்ளுவம்

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு ஆரம்பம் Read More »

குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா டெங்கு சிரமதான நிகழ்வு

ஹஸ்பர் ஏ.எச்_ திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா வேலை திட்டத்தின் கீழ் டெங்கு சிரமதான நிகழ்வு இன்று (27) குச்சவெளி அந்நூரியா (An Nooriya) பாடசாலை வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இடம் பெற்றன. தேசிய டெங்கு நோய் வாரத்தை முன்னிட்டு அரசின் கிளீன் சிறீலங்கா தேசிய வேலை திட்டம் ஊடாக குறித்த டெங்கு நோய் சிரமதான பணி இடம் பெற்றன. இதில் குச்சவெளி பிரதேச பொது

குச்சவெளி பிரதேச சபை மற்றும் பொது மக்கள் இணைந்து கிளீன் சிறீலங்கா டெங்கு சிரமதான நிகழ்வு Read More »