——————————————————————
திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் 2026 பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவின் பாலமுனை-04 பகுதியில் பெண்களின் சுயதொழில் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் கீழ், ரூ. 4 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில், ஹுசைனிய்யா நகர் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த 16 தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றதுடன், பிரதேச செயலகம் மற்றும் கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் அரச அதிகாரிகள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.






