admin

விவாத அரங்கில் திருகோணமலை இந்துக் கல்லூரி வெற்றி

திருகோணமலை இந்துக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரிக்கும் இடையிலான விவாத அரங்கு (03)மாலை திருகோணமலை கோனேஸ்வரா இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.செய்யறிவு மனித வாழ்வை மேம்படுத்துமா? மேம்படுத்தாதா? எனும் தலைப்பில் விவாதம் இரு மணி நேரம் இடம்பெற்றது. மனிதர்களுடைய வாழ்வில் செய்யறிவு மனித வாழ்வில் தடையாக இருக்கும் என விவாதித்து நடுவர்களின் தீர்ப்பின் பிரகாரம் இந்துக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றார்கள்.இவர்களுக்கான பரிசினை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் கலந்து கொண்டு வழங்கி வைத்தார். இதன்

விவாத அரங்கில் திருகோணமலை இந்துக் கல்லூரி வெற்றி Read More »

சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே – பா.உ பிரபு.

சஜித் பிரேமதாசாவாக இருந்தாலும்சரி ரணில் விக்கிரமசிங்கமாக இருந்தாலும்சரி, அல்லது மஹிந்த ராஜபக்சவாக இருந்தாலும், அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே தான் காணப்படுகின்றார்கள் அவர்களுடைய இனவாத செயற்பாடுகள்தான் பிரதான கொள்கையாக இருந்து கொண்டிருக்கின்றது. என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமனற உறுப்பினரும், பிரதே அபிவிருத்திக்குழுத் தலைவரும் சுகாதார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளருமான கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். இன்றயத்தினம் சனிக்கிழமை(04.06.2026) களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள்ள குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே – பா.உ பிரபு. Read More »

குச்சவெளி பிரதேசச் சபை புதிய செயலாளர் கடமை பொறுப்பேற்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள   டபிள்யூ. எச்.எஸ். கயான்  அவர்களை (03)குச்சவெளி பிரதேச சபை தவிசாளர்  ஏ.முபாறக் அவர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. குச்சவெளி பிரதேச சபையின் செயலாளராக கடமையை பொறுப்பேற்ற செயலாளரை வாழ்த்தி தனது பணிகளை திறம்பட முன்னெடுக்குமாறும் தவிசாளர் கூறினார். குச்சவெளி பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்கள் நலன் மற்றும் சிறந்த பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்டு ஆரம்பமான இந்தப் புதிய நிர்வாகப் பயணம், சர்வமத  தலைவர்களின் ஆசீர்வாதங்களுடனும், இறை பிரார்த்தனைகளுடனும் மிகவும்

குச்சவெளி பிரதேசச் சபை புதிய செயலாளர் கடமை பொறுப்பேற்பு Read More »

12 கோடி ரூபா கையூட்டல் விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் அதிரடி விசாரணை ஆரம்பம்!

கொழும்பு: பிரபல பாதாள உலகக் குற்றவாளி ஒருவருக்குச் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் (120 மில்லியன்) கையூட்டல் (Bribery) பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷ சம்பந்தப்பெரும சமர்ப்பித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

12 கோடி ரூபா கையூட்டல் விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் அதிரடி விசாரணை ஆரம்பம்! Read More »

பொலன்னறுவையில் கொடூரம்: கணவனின் தாக்குதலுக்கு உள்ளான 29 வயது இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பொலன்னறுவை, அரலகன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளம் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதனையடுத்து, படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை முதற்கட்ட

பொலன்னறுவையில் கொடூரம்: கணவனின் தாக்குதலுக்கு உள்ளான 29 வயது இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! Read More »

உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்: மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு: இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நீதிப்பொறிமுறையை முற்றாக நிராகரித்து, தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று (04.07.2026) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினால் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஶ்ரீநேசன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, நீண்டகாலமாக உண்மை மற்றும் நீதிக்காகப் போராடி வரும் தாயக உறவுகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார். “உள்ளக நீதிப்பொறிமுறை

உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்: மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டம்! Read More »

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவை டிஜிட்டல் மயமாக்க ‘மக்கள் சேவை மன்றம்’ (PSC) நிறுவனத்தினால் நிதி உதவி வழங்கல்.

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவில், பொதுமக்களுக்கான சேவைகளை மேலும் வினைத்திறனுடனும் நவீனமாகவும் வழங்குவதற்காக, மக்கள் சேவை மன்றம் (People’s Service Council – PSC) நிறுவனத்தினால் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டது. SELAVIP நிறுவனத்தின் அனுசரணையுடன் அமுல்படுத்தப்படும் “காணி உரிமைகளை முறைப்படுத்துதலுக்கான வசதியளித்தல்” (Facilitate for Regularization of Land Title) எனும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 50,000/- ரூபா நிதியுதவி பிரதேச செயலகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவை டிஜிட்டல் மயமாக்க ‘மக்கள் சேவை மன்றம்’ (PSC) நிறுவனத்தினால் நிதி உதவி வழங்கல். Read More »

2026 சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்: இறுதித் திகதி அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு (G.C.E. O/L) விண்ணப்பிப்பதற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இணையவழியூடான (Online) இந்த விண்ணப்ப செயல்முறைகள் நேற்று (ஜூலை 03) முதல் ஆரம்பமாகியுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். குறித்த இறுதித் திகதிக்கு பின்னர் எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

2026 சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்: இறுதித் திகதி அறிவிப்பு! Read More »

சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான கிழக்கு மாகாணத்தின் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்

சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான கிழக்கு மாகாணத்தின் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் செயல்படுத்தப்படும் நிலையான சுற்றுலாத் துறை அபிவிருத்தித் திட்டத்தின் (STSDP) முன்னேற்றம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலா உள்கட்டமைப்பு அபிவிருத்தி செய்வது குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்,  (01 ) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவின் தலைமையில் திருகோணமலையில் உள்ள

சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான கிழக்கு மாகாணத்தின் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை “eAyurvedic” எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறது. மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. குறித்த திட்டத்தின் கீழ், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03) கல்முனை பிராந்திய

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்! Read More »