• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவை டிஜிட்டல் மயமாக்க ‘மக்கள் சேவை மன்றம்’ (PSC) நிறுவனத்தினால் நிதி உதவி வழங்கல்.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவை டிஜிட்டல் மயமாக்க ‘மக்கள் சேவை மன்றம்’ (PSC) நிறுவனத்தினால் நிதி உதவி வழங்கல்.

ஹஸ்பர் ஏ.எச்-

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவில், பொதுமக்களுக்கான சேவைகளை மேலும் வினைத்திறனுடனும் நவீனமாகவும் வழங்குவதற்காக, மக்கள் சேவை மன்றம் (People’s Service Council – PSC) நிறுவனத்தினால் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டது.

SELAVIP நிறுவனத்தின் அனுசரணையுடன் அமுல்படுத்தப்படும் “காணி உரிமைகளை முறைப்படுத்துதலுக்கான வசதியளித்தல்” (Facilitate for Regularization of Land Title) எனும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 50,000/- ரூபா நிதியுதவி பிரதேச செயலகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர்  என். மதிவண்ணன், மக்கள் சேவை மன்றத்தின் (PSC) நிதி நிர்வாக முகாமையாளர் திருமதி பி. கிருஷ்ணவேணி, திட்ட உத்தியோகத்தர்  எம்.பி. குவைஸர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த மக்கள் சேவை மன்றத்தின் (PSC) தலைவர் முகமது பாரிஸ் அவர்கள், “எமது மக்களின் காணி ஆவணங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பாகவும் விரைவாகவும் பேணுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மக்கள் காணி தொடர்பான சேவைகளைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைத் தவிர்த்து, நிர்வாகச் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியும்,” என்று குறிப்பிட்டார்.

இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும், காணிப் பிரிவின் நவீனமயமாக்கலுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் முன்வந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கும், கௌரவ பிரதேச செயலாளர் திரு. என். மதிவண்ணன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இவ்வாறான சமூக மேம்பாட்டுத் திட்டங்களுக்குத் தொடர்ச்சியாக நிதியுதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வரும் SELAVIP நிறுவனத்திற்கும், அதன் பிரதிநிதிகளுக்கும் எமது மக்கள் சேவை மன்றத்தின் (PSC) சார்பாக நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

மக்கள் சேவை மன்றம் (PSC), தொடர்ச்சியாக இவ்வாறான சமூக மேம்பாட்டுத் திட்டங்களை அரசு நிறுவனங்களுடன் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share the Post: