July 4, 2026

12 கோடி ரூபா கையூட்டல் விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் அதிரடி விசாரணை ஆரம்பம்!

கொழும்பு: பிரபல பாதாள உலகக் குற்றவாளி ஒருவருக்குச் சிறைச்சாலையில் சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது மனைவியிடமிருந்து 12 கோடி ரூபாய் (120 மில்லியன்) கையூட்டல் (Bribery) பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் விபரங்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆணைக்குழுவின் உதவி சட்டப் பணிப்பாளர் அனுஷ சம்பந்தப்பெரும சமர்ப்பித்த போதே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

12 கோடி ரூபா கையூட்டல் விவகாரம்: முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் அதிரடி விசாரணை ஆரம்பம்! Read More »

பொலன்னறுவையில் கொடூரம்: கணவனின் தாக்குதலுக்கு உள்ளான 29 வயது இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பொலன்னறுவை, அரலகன்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிம்பொகுண பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகக் கணவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 29 வயதுடைய இளம் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், குடும்பத் தகராறு காரணமாகக் கணவனால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதனையடுத்து, படுகாயமடைந்த நிலையில் அவர் உடனடியாக அரலகன்வில மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை முதற்கட்ட

பொலன்னறுவையில் கொடூரம்: கணவனின் தாக்குதலுக்கு உள்ளான 29 வயது இளம் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! Read More »

உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்: மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு: இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நீதிப்பொறிமுறையை முற்றாக நிராகரித்து, தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று (04.07.2026) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினால் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஶ்ரீநேசன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, நீண்டகாலமாக உண்மை மற்றும் நீதிக்காகப் போராடி வரும் தாயக உறவுகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார். “உள்ளக நீதிப்பொறிமுறை

உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்: மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டம்! Read More »

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவை டிஜிட்டல் மயமாக்க ‘மக்கள் சேவை மன்றம்’ (PSC) நிறுவனத்தினால் நிதி உதவி வழங்கல்.

ஹஸ்பர் ஏ.எச்- திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவில், பொதுமக்களுக்கான சேவைகளை மேலும் வினைத்திறனுடனும் நவீனமாகவும் வழங்குவதற்காக, மக்கள் சேவை மன்றம் (People’s Service Council – PSC) நிறுவனத்தினால் டிஜிட்டல் மயமாக்கல் பணிகளுக்கான நிதி உதவி வழங்கப்பட்டது. SELAVIP நிறுவனத்தின் அனுசரணையுடன் அமுல்படுத்தப்படும் “காணி உரிமைகளை முறைப்படுத்துதலுக்கான வசதியளித்தல்” (Facilitate for Regularization of Land Title) எனும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 50,000/- ரூபா நிதியுதவி பிரதேச செயலகத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் காணிப் பிரிவை டிஜிட்டல் மயமாக்க ‘மக்கள் சேவை மன்றம்’ (PSC) நிறுவனத்தினால் நிதி உதவி வழங்கல். Read More »

2026 சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்: இறுதித் திகதி அறிவிப்பு!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு (G.C.E. O/L) விண்ணப்பிப்பதற்கான பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இணையவழியூடான (Online) இந்த விண்ணப்ப செயல்முறைகள் நேற்று (ஜூலை 03) முதல் ஆரம்பமாகியுள்ளதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். குறித்த இறுதித் திகதிக்கு பின்னர் எக்காரணம் கொண்டும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், பரீட்சார்த்திகள் எவ்வித தாமதமுமின்றி உரிய காலப்பகுதிக்குள் விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

2026 சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரல் ஆரம்பம்: இறுதித் திகதி அறிவிப்பு! Read More »

சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான கிழக்கு மாகாணத்தின் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்

சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான கிழக்கு மாகாணத்தின் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் செயல்படுத்தப்படும் நிலையான சுற்றுலாத் துறை அபிவிருத்தித் திட்டத்தின் (STSDP) முன்னேற்றம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலா உள்கட்டமைப்பு அபிவிருத்தி செய்வது குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்,  (01 ) கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகரவின் தலைமையில் திருகோணமலையில் உள்ள

சுற்றுலாத் துறையின் நிலையான வளர்ச்சிக்கான கிழக்கு மாகாணத்தின் முன்னுரிமைத் திட்டங்கள் குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல் Read More »

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்!

பாறுக் ஷிஹான் அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கு அமைவாக, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மாகாணத்திலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை “eAyurvedic” எனும் செயலி மூலமாக டிஜிட்டல் மயப்படுத்தி வருகிறது. மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இத்திட்டம், அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. குறித்த திட்டத்தின் கீழ், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு கணினிகள் உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (03) கல்முனை பிராந்திய

ஆயுர்வேத வைத்தியசாலைகளின் சேவைகள் டிஜிட்டல் மயமாகிறது:கிழக்கு மாகாணத்தில் “eAyurvedic” செயலி அறிமுகம்! Read More »

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனைகள் முன்வைப்பு

திருகோணமலை வெருகல் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் (02) பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தலைமையில் இடம்பெற்றது இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் பின்வரும்  பிரேரனைகள் விசேடமாக முன்வைக்கப்பட்டன.  மழை  காலங்களில் முத்துச்சேனை பிரதான வீதி வழமையாக வெள்ளத்தினால் மூழ்குகின்றது, ஆகையினால் முத்துச்சேனை பிரதான வீதியில் கல்வெட்டொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோருகின்றேன்.  முத்துச்சேனை விளையாட்டு மைதானம் பள்ளமும் குழியுமாக காணப்படுவதினால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும்

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனைகள் முன்வைப்பு Read More »

கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு–

(கனகராஜா சரவணன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள முனைக்காடு பொது மயானத்தில் கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு வியாழக்கிழமை (02) மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர். குறித்த மயானத்திற்கு சம்பவ தினமான சென்றிருந்த நபர் ஒருவர் அங்கு  கைவிடப்பட்டிருந்த கைக்குண்டு ஒன்றை கண்டு பொலிசாருக்கு அறிவித்துள்ளதையடுத்து அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு குண்டு செயலிழக்கும் விசேட அதிரடிப்படையினரை வரவழைத்தனர். இதனை தொடர்ந்து  குறித்த கைக்குண்டை செயலிழக்க நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று வெள்ளிக்கிழமை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு

கொக்கட்டிச்சோலை முனைக்காடு மயானத்தில் கைக்குண்டு மீட்பு– Read More »

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு மகஜர் கையளிப்பு —

(கனகராஜா சரவணன்) தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் இந்தியா தமிழ்நாட்டிற்கு சென்று சென்னையில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் சந்திரசேகர் ஜோசப் விஜய் இன்று வெள்ளிக்கிழமை (3) சந்தித்து ஈழதமிழ் மக்கள் பிரச்சனை தொடர்பாக கலந்துரையாடி எழுத்து மூலமாக கோரிக்கை கடிதம் ஒன்றை கையளிததுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசிய பேரவை இன்று வெள்ளிக்கிழமை (3) ஊடக

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குழு மகஜர் கையளிப்பு — Read More »