• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்: மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டம்!

உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம், சர்வதேச விசாரணையே வேண்டும்: மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மாபெரும் போராட்டம்!

மட்டக்களப்பு: இலங்கை அரசாங்கத்தின் உள்ளக நீதிப்பொறிமுறையை முற்றாக நிராகரித்து, தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தி மட்டக்களப்பில் இன்று (04.07.2026) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினால் இந்த உணர்வுப்பூர்வமான போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. ஶ்ரீநேசன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, நீண்டகாலமாக உண்மை மற்றும் நீதிக்காகப் போராடி வரும் தாயக உறவுகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்.

“உள்ளக நீதிப்பொறிமுறை எமக்கு வேண்டாம் – சர்வதேச விசாரணையே வேண்டும்” என்ற பிரதான கோஷத்தை முன்வைத்து இப்போராட்டம் நடைபெற்றது. தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறல் சர்வதேச மட்டத்தில் மட்டுமே சாத்தியம் என்பதை வலியுறுத்தி, காணாமலாக்கப்பட்டோரின் தாயார்கள், குடும்ப உறவினர்கள் மற்றும் சிவில் சமூக ஆதரவாளர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை உரக்க வெளிப்படுத்தினர்.

Share the Post: