• Home
  • ›
  • உள்ளூர் செய்திகள்
  • ›
  • வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனைகள் முன்வைப்பு

வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது இம்ரான் எம் பியின் விசேட பிரேரனைகள் முன்வைப்பு

திருகோணமலை வெருகல் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் (02) பிரதியமைச்சர் அருண் ஹேமச் சந்திரா தலைமையில் இடம்பெற்றது இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர்களால் பின்வரும்  பிரேரனைகள் விசேடமாக முன்வைக்கப்பட்டன.

 மழை  காலங்களில் முத்துச்சேனை பிரதான வீதி வழமையாக வெள்ளத்தினால் மூழ்குகின்றது, ஆகையினால் முத்துச்சேனை பிரதான வீதியில் கல்வெட்டொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோருகின்றேன்.

 முத்துச்சேனை விளையாட்டு மைதானம் பள்ளமும் குழியுமாக காணப்படுவதினால் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் முத்துச்சேனை GTMS பாடசாலை மாணவர்கள் என்போர் தமது விளையாட்டு செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாதுள்ளனர். ஆகையினால் மேற்படி மைதானத்தை கிரவலிட்டு செப்பனிடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும். 

. பூநகர் தொடக்கம் வெருகல் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர், மின்சாரமின்மையினால் அவர்கள் தமது பயிர்களுக்கு நீர்பாய்ச்சுவதற்கு சிரமப்படுகின்றனர்.

எனவே, அப்பகுதிக்கு மின்சாரத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

கல்லடி பகுதியைச் சேர்ந்த மக்கள் தமது தேவையை நிறைவேற்றுவதற்காக  8 கிலோ மீட்டர் தூரம் ஈச்சிலம்பற்றுக்கு சுற்றிச் செல்லவேண்டியுள்ளது. ஆகவே கல்லடித்துறைக்கும் ஈச்சிலம்பற்றிற்கும் குறுக்கே செல்லும் ஆற்றில் படகுப் பாதையொன்றினை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோருகின்றேன்.

Share the Post: