குச்சவெளி பிரதேசச் சபை புதிய செயலாளர் கடமை பொறுப்பேற்பு

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் புதிய செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள 

 டபிள்யூ. எச்.எஸ். கயான்  அவர்களை (03)குச்சவெளி பிரதேச சபை தவிசாளர்  ஏ.முபாறக் அவர்களால் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

குச்சவெளி பிரதேச சபையின் செயலாளராக கடமையை பொறுப்பேற்ற செயலாளரை வாழ்த்தி தனது பணிகளை திறம்பட முன்னெடுக்குமாறும் தவிசாளர் கூறினார்.

குச்சவெளி பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்கள் நலன் மற்றும் சிறந்த பொதுச் சேவையை நோக்கமாகக் கொண்டு ஆரம்பமான இந்தப் புதிய நிர்வாகப் பயணம், சர்வமத  தலைவர்களின் ஆசீர்வாதங்களுடனும், இறை பிரார்த்தனைகளுடனும் மிகவும் சிறப்பாக ஆரம்பமானது.

 தவிசாளர்  முபாரக் அவர்களின் வழிகாட்டலுடனும், மக்கள் பிரதிநிதிகளின் ஒத்துழைப்புடனும், புதிய செயலாளர் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேசம் மேலும் பல முன்னேற்றங்களை நோக்கிப் பயணிக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Share the Post: