• Home
  • உள்ளூர் செய்திகள்
  • மட்டக்களப்பில் சுயதொழில் பயிற்சி நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.தொழில் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(01.08.2026) மட்டக்களப்பில் தனியார் விடுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பில் சுயதொழில் பயிற்சி நிறைவு செய்தோருக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு.தொழில் பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை(01.08.2026) மட்டக்களப்பில் தனியார் விடுதியில் நடைபெற்றது.

பெண்களின் சுயதொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இலவச ஐசிங்கேக் உற்பத்தி, ஆரிவேக் பயிற்சி, பனையோலை உற்பத்தி பயிற்சி, கணணிப் பயிற்சி, அழகுக்கலைப் பயிற்சி, ஆங்கில மொழிப் பயிற்சி, உள்ளிட்ட கற்கைநெறிகளை சுவிஸ் பொண்டானா பௌண்டேசன் அமைப்பின் அனுசரணையில், அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை, புதூர் கொடுவாமடு, கல்லடி, மட்டக்களப்பு நகர், போன்ற இடங்களில் இப்பயிற்சிகள் நடைபெற்றன. 4 மாதங்களாக நடைபெற்ற இப்பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கே இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இ.சிறிநாத், பொண்டானா நிறுவனத்தின் பணிப்பாளர் ஆதிரையன், அம்மன் மகளில் இல்ல பௌண்டேசனின் பணிப்பாளர் வாமதேவர், இணைப்பாளர் ரஞ்ஜித்குமார், ஆலோசகர் கமலதாஸ், என பலர் இதன்போது கலந்து கொண்டு பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

Share the Post: